pakistan news :பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருவதையடுத்து, பணக்காரர்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள் புதிய கார் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருவதையடுத்து, பணக்காரர்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள் புதிய கார் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும், சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதால் இந்த புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.
அந்நியச் செலாவணி சரிகிறது
பாகிஸ்தான் அரசு வரவு செலவு அறிக்கையில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாகி்ஸ்தானுக்கு ஏற்றுமதி மூலம் வர வேண்டிய டாலர்களைவிட இறக்குமதி மூலம் தர வேண்டிய கடன்கள்தான அதிகமாக இருக்கிறது. அந்நியச் செலவானி குறைந்து 1000 கோடி டாலருக்கு கீழ் வந்துவிட்டது. சரியாகக் கூறினால் 45 நாட்களுக்குத் தேவையான இறக்குமதியைச்சமாளிக்க மட்டுமே அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது.
கடும் கட்டு்பபாடுகள்
பாகிஸ்தானில் ஜூலை மாதம் 2022-23ம் நிதியாண்டுதொடங்குகிறது. இதற்க்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் இஸ்மாயில் தாக்கல் செய்தார். அதில் “ பணக்காரர்களுக்கு கூடுதலாக வரிவிதிக்கப்பட்டுள்ளது, அரசுஊழியர்கள் புதிதாக எந்த வாகனங்களும் வாங்கத் தடை விதிக்ககப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் எந்தவாகனத்தையும் யாரும்இறக்குதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
.நாம் கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளம். ஆனால், இதுதான் கடினமான முடிவுகளுக்கு முடிவும் அல்ல. பாகிஸ்தான் அரசு வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்தால் கூடுதலாக 34 கோடி டாலர் வருவாய் கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையும் குறையும் ஜிடிபியில் நிதிப்பற்றாக்குறையை 4.9 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கண்டிப்பு
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.97 சதவீதமாக இருக்கிறது. ஆனால், 2022-23ம் நிதியாண்டில் 5 சதவீதமாக இலக்கு வைத்துள்ளது. 2022-23ம் ஆண்டில் பாகிஸ்தான் ஒட்டுமொத்த செலவு இலக்கு 9.50 லட்சம் கோடியாகும் ” எனத் தெரிவித்தார்.
இந்தத் தடை அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா, அல்லது தனிநபர்களுக்கும் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை
சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு விதித்த பல்வேறு நிபந்தனைகளில் முக்கியமானது, எரிபொருள் மானியம் வழங்கக்கூடாது என்பதுதான் இதனால்தான்40 சதவீதம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்துவிட்டது.