Family Health Insurance Plans - அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!!!

Published : May 25, 2025, 02:22 PM IST
Do you Need a Proof to Claim Section 80D Health Insurance Tax Benefits?

சுருக்கம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். Family Health Insurance Plan-இல் ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கவரேஜ் அளிக்கப்படுகிறது. 

மருத்துவக் காப்பீடு என்பது அனைவரும் எடுக்க வேண்டிய முக்கியமான பாலிசி என்றால் அது மிகையல்ல. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். Family Health Insurance Plan-இல் ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர் கள் அனைவருக்கும் கவரேஜ் அளிக்கப்படுகிறது. அதாவது, குடும்பத் தலைவரோ, குடும்ப உறுப்பினர்களோ மேற்கொள்ளும் மருத்துவச் சிகிச்சைக்கு இந்த பாலிசியில் இழப்பீடு வழங்கப்படும். அதிகபட்சம் ஆறு பேருடன் சேர்ந்து குடும்ப பாலிசியை எடுக்க முடியும்.இந்த பாலிசியை இந்தியா விலுள்ள அனைத்து பொதுக் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அளித்து வருகின்றன. குடும்ப மருத்துவ பாலிசியில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தனித்தனி கவரேஜ் அல்லது சுழற்சி (Floater) முறையில் கவரேஜ் இருக்கும். ஃப்ளோட்டர் பாலிசியில் ஒற்றை பிரீமியம் (Single Premium) கட்டுவது மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுழற்சி முறை யில் கவரேஜ் கிடைக்கும்.

காப்பீட்டு பிரீமியம் நிர்ணயம்

குடும்ப மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வயதின் அடிப்படையில்தான் பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும். குடும்ப உறுப்பினரின் வயது 56 வயதுக்கு மேல் இருந்தால் குடும்ப பாலிசியின் பிரீமியம் அதிகமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நிலையில் வயதானவர் களுக்கு தனி பாலிசி அல்லது மூத்த குடிமக்களுக் கான சிறப்பு பாலிசியை எடுத்துவிட்டு, மற்றவர்களை இணைத்து குடும்ப பாலிசியை எடுப்பது லாபகரமாக இருக்கும்.

கவரேஜ் தொகை எவ்வளவு

குடும்ப பாலிசியின் கவரேஜ் தொகையைப் பொறுத்துதான் பிரீமியத் தொகை இருக்கும். அதிக கவரேஜ் எனில், பிரீமியம் அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாறு மற்றும் பெற்றோரின் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும். பெற்றோருக்கு இதயம், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருந்தாலோ, குடும்ப உறுப்பினர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் இருந்தாலோ குடும்ப பாலிசியின் பிரீமியம் அதிகரிக்கும்.

எப்படி கட்டவேண்டும்

ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டுவதைவிட இரண்டு ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாக பிரீமியம் கட்டுவது லாபகரமாக இருக்கும். ஆனால், மொத்தமாக கட்டும்போது பெரிய தொகை தேவைப்படும். பண வசதியைப் பொறுத்து ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டுவதா அல்லது நீண்ட கால பாலிசியாக எடுப்பதா என்பதை முடிவு செய்துகொள்ளவும்

பிரீமியம் எப்போது அதிகமாகும்

அடிப்படை பாலிசி உடன் துணை பாலிசிகளை (Riders) எடுக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும். விபத்துக் காப்பீடு, கிரிட்டிக்கல் இல்னஸ் போன்ற துணை பாலிசியை எடுத்தால் பிரீமியம் அதிகரிக்கும். வசிக்கும் நகரத்தைப் பொறுத்தும் பிரீமியம் அதிகரிக்கும். அதிக விபத்து மற்றும் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி, அதிக மாசு நிறைந்த நகரத்தில் வசிக்கும்போது குடும்ப மருத்துவக் காப்பீட்டுக் கான பிரீமியம் அதிகமாக இருக்கும். இந்த நகரங்களில் வசிக்கும் நிலையில் விபத்தில் சிக்கவும் நோய் வாய்ப்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதால், பிரீமியம் அதிகமாக இருக்கும்.

விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பணித் தன்மைக்கு ஏற்ப பிரீமியம் இருக்கும். உதாரணமாக, வேலை விஷயமாக அதிக பயணம் செய்பவர்கள் மற்றும் புகையை சுவாசிக்கக்கூடிய, உலோகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர் களைக் கொண்ட குடும்ப பாலிசியில் பிரீமியம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும்.குடும்ப உறுப்பினர்களுக்கு அடிக்கடி புகை மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்தால் பிரீமியம் அதிகரிக்கும். அடிக்கடி தொடர்ந்து புகை பிடிப்பவர்கள், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற தீவிர நோய் வர வாய்ப்பிருப்பதால், அது போன்றவர்களைக் கொண்ட குடும்ப பாலிசியில் பீரிமியம் அதிகமாக இருக்கும்.

விதிமுறைகள் எப்படி இருக்கும்?

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல் சுமார் 15 மடங்குக்கு இணையான தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறையாகும். ஆனால், மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, பல்வேறு விஷயங்களைக் கவனித்துதான் பாலிசி தொகையை முடிவு செய்ய முடியும். வயது, மருத்துவ வரலாறு, வசிக்கும் நகர் உள்ளிட்டவைகளைக் கவனிக்க வேண்டும். மேலும், ஒருவரால் எந்த அளவுக்கு சுலமாக பிரீமியம் கட்ட முடியும் என்பதையும் பார்க்க வேண்டும். பணிபுரியும் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு எடுத்துத் தரப்பட்டிருந்தால் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், பொதுவாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்தினருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்துக்கொள்வது நல்லதாகும்.

எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்கவேண்டும்?

அலுவகத்தில் எந்தளவு தொகைக்கு பாலிசி இருக்கிறதோ, அதை ரூ.10 லட்சத்திலிருந்து கழித்து மீதித் தொகைக்கு எடுத்துக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு இருக்கிறது எனில், அலுவலக பாலிசி தவிர சுமார் 10 லட்சத்துக்கு பாலிசி இருப்பது நல்லது. குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி, இரண்டு பிள்ளைகளைக்கொண்ட நான்கு பேர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு குடும்ப மருத்துவக் காப்பீடு எடுக்க ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.25,000 ஆகும். ஆபத்து காலத்தில் அனைவருக்கும் பாலிசி எடுப்பது நல்லது. அதன் விதிமுறைகளை அறிந்து எடுப்பது கட்டாயம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?