Explained : ஆர்பிஐ-யின் நாணயங்கள் வழங்கும் எந்திரம்| 50 பைசா உள்பட, நாணயங்கள் புழக்கம் எவ்வளவு தெரியுமா?

Published : Mar 01, 2023, 05:14 PM IST
Explained : ஆர்பிஐ-யின் நாணயங்கள் வழங்கும் எந்திரம்| 50 பைசா உள்பட, நாணயங்கள் புழக்கம் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

இதுவரை… கடந்த மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பரிசோதனை முயற்சியாக, 12 நகரங்களில் 19 இடங்களில் QR-code அடிப்படையில் நாணயங்கள் வழங்கும் எந்திரம் நிறுவப்படும் என அறிவித்தார்.

இதுவரை…

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பரிசோதனை முயற்சியாக, 12 நகரங்களில் 19 இடங்களில் QR-code அடிப்படையில் நாணயங்கள் வழங்கும் எந்திரம் நிறுவப்படும் என அறிவித்தார்.

நாணயங்கள் வழங்கும் எந்திரம் திட்டம் என்றால் என்ன

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் இதற்கு முன் ரூபாய் நோட்டுகளை எந்திரத்தில் செலுத்தி நாணயங்களைப் பெற்றுவந்தனர்.

இனிமேல், தங்களின் யுபிஐ கணக்கைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான நாணயங்களைப் பெறலாம். நாணயங்கள் கிடைத்தபின் யுபிஐகணக்கில்இருந்து பணம் கழிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த நாணயங்கள் தேவை என்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக 20 ரூபாய்க்கு, 5 ரூபாய் நாணயங்களாக வேண்டும், அல்லது 2 ரூபாய் நாணயங்களாக வேண்டுமா எனத் தேர்வு செய்யலாம்.

ஆர்பிஐ துணை கவர்னர் டி ரபி சங்கர் கூறுகையில் “நாணயங்களைப் பொறுத்தமட்டில், விச்திரமானது என்னவெனில், சப்ளை மிக அதிகமாக இருக்கிறதுதான் ஆனால், நாணயங்கள் சேமிக்க அதிக இடம் தேவைப்படுகிறது அதனால் பரவலாக விநியோகிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தேவை  இருக்கிறது” எனத் தெரிவித்தார்

அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதிப்பு 2 நாட்களில் 30% அதிகரிப்பு

நாணயங்களைப் பெறுவதற்கு பழைய எந்திரங்களில் ரூபாய் நோட்டுகளை உள்ளேஅனுப்பி, நாணயங்களைப் பெற வேண்டும்.ஆனால், இந்த நவீன எந்திரம், ரூபாய் நோட்டுகளை திணித்து நாணயங்களை பெறும் முறையில் இருந்து மாறுபட்டது.

சில நேரங்களில் ரூபாய் நோட்டுகளுக்குப்பதிலாக போலிநோட்டுகளைத் திணித்து நாணயங்களைத் திருடிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த மோசடிகளைத் தடுக்கவும், ரூபாய் நோட்டுகளை எந்திரத்தி்ல்திணித்து நாணயங்களைப் பெறுவதற்கு பதிலாக யுபிஐ முறையில் நாணயங்களைப் பெறலாம். பரிசோதனை முயற்சியாக 12நகரங்களில் 19 இடங்களில் நாணயங்கள் வழங்கும் எந்திரம் நிறுவப்படுகிறது.

எளிமையாக இருக்கவேண்டும், அனைவருக்கும் நாணயங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ரயில்வே நிலையம், ஷாப்பிங் மால்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் ஆகியவற்றில் இ்ந்த எந்திரம் நிறுவப்படும்

நாணயங்கள் புழக்கம் எவ்வளவு

ஆர்பிஐ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ரூ.28ஆயிரத்து 857 கோடிக்கு 1 ரூபாய் மற்றும் அதற்கு மேல் அதிகமான மதிப்புள்ள(“ரூப்பி காயின்” )நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு புழக்கத்தில் இருந்ததைவிட 7.2% அதிகமாக அளவில் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.

சிறிய மதிப்பு(ஸ்மால் காயின்) கொண்ட அதாவது 50 காசு நாணயங்கள் ரூ.743 கோடிக்கு புழக்கத்தில் உள்ளன. 

நாணயங்கள் 50பைசா, ஒரு ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்களில் நாணயங்கள் உள்ளன. இதில் “ஸ்மால் காயின்” என்பது 50 பைசா, ஒரு ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள நாணயங்களுக்கு “ரூப்பி காயின்” என்று பெயர்

ராகுல் காந்தியின் 'நியூ லுக்’ ! ஹேர்கட், தாடியில்லை, நோ டிஷர்ட்

2022, டிசம்பர் வரை டிஜிட்டல் பேமெண்ட்களில் மொத்தத்தோடு ஒப்பிடுகையில் இதன் மதிப்பு ரூ.9557.4 கோடியாகும். 

டிஜிட்டல் மயத்துக்கு எதிரானதா

நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசும், பிரதமர் மோடியும் கூறி வரும் நிலையில் அதற்கு மாறாக நாணயங்கள் வழங்கும் எந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு சென்டர் ஃபார் இன்டர்நெட் அன்ட் சொசைட்டி மையத்தின விபுல் கார்பாந்தா கூறுகையில் “இந்த திட்டத்தை டிஜிட்டல் மற்றும் ரொக்கப் பணத்தின் பூஜ்ஜிய-தொகை விளையாட்டாகப் பார்க்கக்கூடாது. இரண்டுமே ஒன்றுக்கொன்று எளிதாக துணைபுரியும். இது பிடிவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல்  மாறாக நடைமுறைக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 

இந்த நேரத்தில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு குறிப்பிட்ட சிக்கலை தீர்க்கவில்லை என்றால், நாட்டின் பாரம்பரிய நாணய முறையை பயன்படுத்தி, இலக்கை அடைய வேண்டும்” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
8வது ஊதியக் கமிஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்