EPFO e-Passbook : இபிஎப் இ-பாஸ்புக்கை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அதில் பணம் டெபாசிட் இருப்பு எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு எளிய வழிகள் வந்துவிட்டன.
இபிஎப் இ-பாஸ்புக்கை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அதில் பணம் டெபாசிட் இருப்பு எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு எளிய வழிகள் வந்துவிட்டன.
மாத ஊதியம் பெறும் ஒவ்வொருவரும் ஊதியத்திலிருந்து ஒருபகுதியை இபிஎப்ஓ சேமிப்பில் செலுத்துகிறார்கள். ஓய்வுகாலத்துக்குப்பின் இந்த இபிஎப்ஓகணக்கிலிருந்து கணிசமான பணம் கைக்கு கிடைப்பதால், அது ஓய்வுகாலத்தில் வரும் செலவுகளை சமாளிக்க உதவுகிறது.
கடந்த ஆண்டுவரை இபிஎப்ஓ டெபாசிட்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கிய மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 8.10 சதவீதமாகக் குறைத்துவிட்டது.
இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள், மாதந்தோறும் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை வீட்டிலிருந்தவாரே உட்கார்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும். இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், இ-பாஸ்புக்கை இபிஎப்ஓ இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
இபிஎப் என்றால் என்ன
தொழிலாளர்கள் சேமநலநிதி மற்றும் இதர சட்டங்கள் 1952ன் கீழ் இபிஎப் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்களிடம் இருந்து எந்த அளவு பணம் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே அளவு நிறுவனங்களும் செலுத்த வேண்டும். ஒருநிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்டஊழியர்கள் பணியாற்றினால் இபிஎப் கட்டாயமாகும்.தற்போது 5 கோடி சந்தாதாரர்கள் இபிஎப்பில்உள்ளனர்.
இபிஎப் டெபாசிட்களுக்கு நடப்பு நிதியாண்டு முதல் 8.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுவரை 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டநிலையில்அது 40 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இபிஎப்ஓ இ-பாஸ்புக்கை பதவிறக்கம் செய்வது எப்படி