
தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாக இல்லாத வகையில் இன்று ஆபரணத் தங்கம் சவரணுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,760க்கும், சவரண் ரூ.38,080க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,810 ஆகவும், சவரணுக்கு, ரூ.400 அதிகரித்து, ரூ.38,480க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களுக்குப்பின் தங்கம் விலை சவரண் ரூ.38ஆயிரத்து 400க்கு மேல் உயர்ந்துள்ளது, இது 10 நாட்களில் இல்லாத அளவு உயர்வாகும்.
கடந்த மே 23-ம் தேதி 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,837க்கு விற்கப்பட்டது, சவரண் ரூ.38,696 க்கு உயர்ந்தது. ஆனால், அதன்பின் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.97 குறைந்துள்ளது, சவரணுக்கு, ரூ.776 குறைந்துள்ளது. பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது.
வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.50 பைசா இன்று அதிகரித்துள்ளது. இதன்படி, வெள்ளி கிராம் ரூ.68.50 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.68,500க்கு விற்பனையாகிறது. ஏறக்குறைய கிலோவுக்கு ரூ.1,500 அதிகரித்துள்ளது.
கடந்த மே 25ம் தேதி முதல் ஜூன்2ம் தேதிவரை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் பெரிதாக இல்லை. இந்நிலையில் கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்தது, கிலோவுக்கு ரூ.1500 விலை உயர்ந்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.