Booozie: 10 நிமிடங்களில் வீ்ட்டுக்கே மது டெலிவரி : ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய முயற்சி

Published : Jun 03, 2022, 09:20 AM ISTUpdated : Jun 03, 2022, 10:27 AM IST
Booozie:  10 நிமிடங்களில் வீ்ட்டுக்கே மது டெலிவரி : ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய முயற்சி

சுருக்கம்

Booozie: 10-minutes liquor delivery service in Kolkata: ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் குடிமகன்கள் மதுவை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை தொடங்க உள்ளது.

10-minutes liquor delivery service in Kolkata: ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் குடிமகன்கள் மதுவை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை தொடங்க உள்ளது.இந்த சேவை முதல்கட்டமாக கொல்கத்தாவில் மட்டும் தொடங்கியுள்ளது

பூஜி என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம்தான் 10 நிமிடங்களில் மதுவை டெலிவரி செய்ய இருக்கிறது. இது இந்தியாவில் முதல்முறையாக செய்யப்படும் முயற்சியாகும்.

இதற்கு முன் ஆன் லைனில் ஏராளமான நிறுவனங்கள் மதுஆர்டர்களை வாங்கியுள்ளன. ஆனால், டெலிவரி என்பது உடனடியாக இருக்காது, எந்த நிறுவனமும் 10 நிமிடங்களில் மதுவை டெலிவரி செய்ததுஇல்லை. ஆனால், ிந்த நிறுவனம் ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் மதுப்பிரியர்களுக்கு மதுவை டெலிவரி செய்ய இருக்கிறது.

மேற்கு வங்க அரசின் சுங்கத்துறை அனுதிக்குப்பின், கிழக்கு மெட்ரோபோலிஸுக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹைதராபாத்தைச் சேர்ந்த பூஜி நிறுவனம், குடிமகன்கள் ஆர்டர் செய்தவுடன் அருகே இருக்கும் மதுக்கடையில் மதுவை வாங்கி, அடுத்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்ய இருக்கிறது. இதற்காக வாடிக்கையாளர்களின் மனநிலை, ஆர்டர் வரிசை ஆகியவற்றை அறிந்து செயல்பட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது

இன்னோவென்ட் டெக்னாலஜி நிறுவனம் கூறுகையில் “ பி2பி லாஜிஸ்டிக்ஸ் மேலாண் நிர்வாகத்தை உருவாக்கியிருப்பதால்,  டெலிவரி செலவு மிகவும் குறைந்த அளவில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது
பூஜி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் சிஇஓ விவேகானந்தா பால்ஜிபள்ளி கூறுகையில் “ எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கதவுகளை மே.வங்க அரசு திறந்துள்ளது.  வாடிக்கையாளர்களின் தேவையையும், சந்தையின் தேவையையும் நிறைவேற்ற முடியும்” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்