
பிஎம் ஸ்ரீ பள்ளிகக்கூடங்கள் என்ற பெயரில் மாதிரிப் பள்ளிக்கூடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசிய கல்வித்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய கல்வித்துறை இணைஅமைச்சர், திறன்மேம்பாட்டு துறை அமைச்சர், பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் குழுவின் தலைவர் கே. கஸ்தூரிரங்கன், கல்வித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் நேற்று பங்கேற்றனர்.
இதில் 2-ம் நாளான நேற்று மத்தியகல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது:
நாடுமுழுவதும் மாதிரிப் பள்ளிக்கூடங்களை மத்திய அரசு உருவாக்க இருக்கிறது. இதற்கு பிஎம் ஸ்ரீ மாதிரிப் பள்ளிக்கூடங்கள் என்று திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு 2020ம் ஆண்டு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையின் சோதனைக் கூடமாக இந்த பிஎம் ஸ்ரீ பள்ளிக்கூடங்கள் இருக்கும். எதிர்கால இந்தியாவுக்காக மாணவர்களை முழுமையாகத் தயார் செய்வதாகும்.
எதிர்காலத்தில் பிஎம் ஸ்ரீ மாதிரிப்பள்ளிக்கூடங்கள் அமைப்பது குறித்தும், கல்வி முறை குறித்தும் மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவை அறிசார் பொருளாதாரத்தில் மிகப்பெரியநாடாக உருவாக்குவதில் அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் இந்த நோக்கத்தில் உலக நலனும் சேர்ந்துள்ளது. வாசுவேத குடும்பம் என்பதை நம்புகிறோம்,நாகரீகமுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தேசத்தை பாதுகாப்பது மட்டும் நமது கடமையல்ல, உலக நலனைக் காப்பதற்கும் நமக்கு பொறுப்பு இருக்கிறது.
தேசியக் கல்விக்கொள்கை முன்பருவ பள்ளிக்கல்வி முதல் மேல்நிலைக் கல்விவரை அனுகுகிறது. இதில் ஆசிரியர் பயிற்சி, பாலியல் கல்வி, பள்ளிக்கல்வியோடு சேர்ந்து திறன்மேம்பாட்டு பயிற்சி, தாய்மொழியில் கற்போது ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்து, 21-வது நூற்றாக்கான சர்வதேச குடிமகனாக மாணவர்களை உருவாக்க வேண்டும்.
மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் தங்களின் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் இங்கு பகிர்ந்து ஆலோசிக்க வேண்டும். இதன் மூலம் நமது தேசத்தின் கல்வித்தரம், கற்றும் நிலை அடுத்த கட்டத்துக்கு நகரும். நாடுமுழுவதும் நீண்டகால நோக்கில் கல்விமுறையை வலுப்படுத்த இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படும்
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.