service charge news: service charge வசூலிப்பது சட்டவிரோதம்: ஹோட்டல்களுக்கு மத்திய அரசு அதிரடி

By Pothy RajFirst Published Jun 3, 2022, 8:15 AM IST
Highlights

restaurant service charge: Centre says service charge levied by restaurants is illegal: ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது சட்டவிரோதம். அந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்புக்கு(NRAI)மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

restaurant service charge : ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது சட்டவிரோதம். அந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்புக்கு(NRAI)மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புகார்கள்

ரெஸ்டாரண்ட்கள், ஹோட்டல்கள் தற்போதும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதாக தொடர்ந்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. 

நுகர்வோர் விவகாரச் சட்டத்தின்படி, ஹோட்டலுக்கோ அல்லது ரெஸ்டாரண்ட்டுக்கோ செல்லும் வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக சர்வீஸ்(சேவை)கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. அவ்வாறு வாங்குவது தவறு. சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தருவதாகும், அவர்களை வற்புறுத்தி வாங்கக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருந்தது.

விருப்பத்தின் அடிப்படை

சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தருவதாகும். அதை தராமலும் செல்லலாம். அவர்களை வற்புறுத்தக்கூடாது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கடந்த மாதம் 23ம் தேதி விளக்கம் அளித்து, எச்சரிக்கை விடுத்திருந்துத.

ஆலோசனை

இது தொடர்பாக இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்புடன் நேற்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரோஹித் குமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹோட்டல்கள், ரெஸ்டான்ட்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வாங்குவதாக வரும் புகார்கள் குறித்தும், ஊடகத்தில் வரும் செய்திகள் குறி்த்தும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதம்

இதையடுத்து, மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் சார்பில் பிறப்பித்த உத்தரவில், “ மத்திய நுகர்வோர் பாதுகாப்புச்சட்டத்தில் ரெஸ்டாரண்ட்கள், ஹோட்டல்கள் நுகர்வோர்களிடம் சர்வீஸ் சார்ஜ் வாங்குவது குறித்து ஏதும்கூறப்படாத நிலையில் அதை வசூலிப்பது சட்டவிரோதம், நியாயமற்ற போக்கு.

இதை உடனடியாக ரெஸ்டாரன்ட்கள், ஹோட்டல்கள் நிறுத்த வேண்டும். சர்வீஸ் சார்ஜ் அல்லது டிப்ஸ் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையில் வழங்குவதாகும். இதை பில்கட்டணத்துடன் சேர்க்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல் நுகர்வோர்களிடம் வலுக்கட்டாயாக சர்வீஸ் சார்ஜை வசூலித்து அதை பில்கட்டணத்துடன் சேர்ப்பதும் கூடாது.” என உத்தரவிட்டுள்ளது.

தனியாகச்ச ட்டம்

இதற்கிடையே ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தனியாக சட்டம் கொண்டுவரவும் நுகர்வோர் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

டந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வீஸ் சார்ஜ் குறித்து தெளிவான விளக்கமும், விதிகளையும் வகுத்துள்ளது. அதன்படி, சர்வீஸ் சார்ஜ் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயமாக வசூலிக்கக்கூடாது, அது விருப்பத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தருவதாகும். கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஹோட்டல்களுக்கு மத்திய அ ரசு அறிவுறுத்தியிருந்தது. 

வெளிப்படையானது

இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்பு தலைவர் கபீர் சூரி கூறுகையில் “ ஹோட்டல்கள் சர்வீஸ் சார்ஜ் வெளிப்படையாகவே வசூலிக்கிறது. இந்த கட்டணத்தை நீதிமன்றமே வரவேற்றுள்ளது. இந்த சர்வீஸ் சார்ஜிலிருந்துதான் மத்திய அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது” எனத் தெரிவித்தார்

ஆனால், எந்த நீதிமன்றமும் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதை வரவேற்கவும் இல்லை, அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நுகர்வோர் அமைச்சக அதிதகாரிகள் தெரிவித்தனர்.

click me!