Govt approves 8.1% interest rate on EPF deposits for FY22, lowest in over 40 years: மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டு 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது, நடப்பு நிதியாண்டுக்கான அந்த வட்டிவீதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
epfo interet rate :மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டு 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது, நடப்பு நிதியாண்டுக்கான அந்த வட்டிவீதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
40 ஆண்டுகளில்
ஏறக்குறைய 5 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கும் இந்தத் திட்டத்துக்கு இந்தநிதியாண்டு வழங்கப்படும் வட்டி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் (2022-23)நடப்பு நிதியாண்டுக்கான வட்டிவீதத்தை 8.5 சவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. வட்டிவீதத்தை குறைத்ததற்கு தொழிலாளர்கள், எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டாலும், பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து வட்டிக் குறைப்பு செய்யப்பட்டது.
கடைசியாக
கடைசியாக கடந்த 1977-78ம் ஆண்டு பிஎப்க்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டதுதான் மிகக்குறைந்தபட்சமாகும். அதன்பின் 42 ஆண்டுகளிலேயே மிகக்குறைவான வட்டி இப்போதுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19ம் ஆண்டு 8.65% வழங்கப்பட்டது, 2019-20ம் ஆண்டு 8.50%சதவீதமாக வட்டிக் குறைக்கப்பட்டது. 2017-18ம் ஆண்டு 8.55 சதவீதமாக 2016-17ம் ஆண்டு பிஎப் வட்டி8.65%, இருந்தது. அதிகபட்சமாக 2015-16ம் ஆண்டு பிஎப் வட்டி 8.80 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
2013-14, 2014-15ம் ஆண்டு 8.75%, 2012-2013ம் ஆண்டு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. 2011-12ம் ஆண்டு 8.25%வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
ஆனால் இந்த வட்டிக்குறைப்பு பரிந்துரைக்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதல் பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், “ நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.1 சதவீதமாக நிர்ணயிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டுக்கான வட்டி உறுப்பினர்கள் கணக்கில் சேர்க்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது