epf interest rate: நல்ல வட்டிதான் கொடுத்திருக்கோம்! பிஎப் வட்டி குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில்

By Pothy RajFirst Published Mar 22, 2022, 10:59 AM IST
Highlights

epf interest rate: இபிஎஃப்ஓ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய 8.1% வட்டி மற்ற திட்டங்களோடு ஒப்பிடும்போது சிறந்த வட்டிதான். நாட்டின் உண்மையான நிலவரத்தின் பரிதிபலிப்புதான் வட்டிவீதம் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இபிஎஃப்ஓ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய 8.1% வட்டி மற்ற திட்டங்களோடு ஒப்பிடும்போது சிறந்த வட்டிதான். நாட்டின் உண்மையான நிலவரத்தின் பரிதிபலிப்புதான் வட்டிவீதம் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிஎப் வட்டி குறைப்பு

மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் நிலவி வந்த பிஎப் வட்டியான 8.50 சதவீதத்திலிருந்து 8.10% சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 1977-78ம் ஆண்டு பிஎப்க்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டதுதான் மிகக்குறைந்தபட்சமாகும். அதன்பின் 42 ஆண்டுகளிலேயே மிகக்குறைவான வட்டி இப்போதுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

40 ஆண்டுகளில்

கடந்த 2018-19ம் ஆண்டு 8.65% வழங்கப்பட்டது, 2019-20ம் ஆண்டு 8.50%சதவீதமாக வட்டிக் குறைக்கப்பட்டது. 2016-17ம் ஆண்டு பிஎப் வட்டி8.65%, 2017-18ம் ஆண்டு 8.55 சதவீதமாக இருந்தது. அதிகபட்சமாக 2015-16ம் ஆண்டு பிஎப் வட்டி 8.80 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 
2013-14, 2014-15ம் ஆண்டு 8.75%, 2012-2013ம் ஆண்டு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. 2011-12ம் ஆண்டு 8.25%வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வட்டி

இந்நிலையில் மாநிலங்களில் நேற்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், பிஎப் வட்டி குறைப்பு குறித்த கேள்விக்கு பதில்அளித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

இபிஎஃப்ஓ அறங்காவலர்கள் குழு கடந்த சில ஆண்டுகளாக வட்டிவீதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. ஆனால், இப்போது வட்டி 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வட்டிக்குறைப்பு தொடர்பான திட்டவரைவு இன்னும் நிதிஅமைச்சகத்திடம் வரவில்லை
ஆனால், மற்ற சேமிப்புத்திட்டங்களான சுகன்யா சம்ரிதி ஜோனாவுக்கு வட்டி 7.60%, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் 7.40%வட்டி வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களோடு ஒப்பிடுகையில் பிஎப் திட்டத்துக்கு நல்ல வட்டி வழங்கப்படுகிறது.

எல்ஐசி

அதுமட்டுமல்லாமல், நாட்டு நடப்பில் என்ன சூழலோ அதைத்தான் இந்த வட்டிவீதம் பிரதிபலிக்கிறது. எல்ஐசி ஐபிஓ வெளியீட்டில் பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியை அரசு வழங்க உள்ளது, 10 சதவீதத்தை தகுதிவாய்ந்த பாலிசிதாரர்களுக்கு வழங்குவோம். 
இவ்வாறு சீதாராமன் தெரிவித்தார்
 

click me!