elon musk Sells Tesla :எலான் மஸ்க் திடீர் முடிவு: டெஸ்லா நிறுவனத்தின் 400 கோடி டாலர் பங்குகள் திடீர் விற்பனை

By Pothy Raj  |  First Published Apr 29, 2022, 11:24 AM IST

Elon Musk Sells $4 Billion Tesla Shares : உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்திலிருந்து 440 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார்.


உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்திலிருந்து 440 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

இந்த தகவலை பங்குச்சந்தையில் அளித்த பைலிங்கின்போது, எலான் மஸ்க் தெரிவித்துள்ளது வெளியாகியுள்ளது. அதாவது டெஸ்லா நிறுவனத்தில் 17% பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார், அதில் 2.6% பங்குகளை தற்போது திடீரென விற்பனை செய்துள்ளார்.

Latest Videos

undefined

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, “ ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக 4400 கோடி டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்கான பணத் தேவைக்காக எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை விற்றிருக்கலாம். 

எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 26800 கோடி டாலராகும்.  இதில் 2100 கோடியை பங்குகளாக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள 17% எவ்வாறு வழங்கப்போகிறார் என்பது தெரியவில்லை. பங்குச்சந்தையில் பட்டியலிடாத ராக்கெட் நிறுவனமான ஸ்பேக்ஸ்எக்ஸ்ஸில் 43.61 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வைத்திருக்கிறார். இந்த நிறுவநத்தின் மதிப்பு 10000கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பங்குகளை பிரித்து வழங்குவதில் சிரமங்களைப் போக்க ஏதாவது கூட்டாளியை எலான் மஸ்க் தேடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் அளவுக்கு எலான் மஸ்கிற்கு புதிதாக பார்ட்னர் கிடைப்பது சந்தேகம்” எனத் தெரிவித்துள்ளது. 

1640 கோடி டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளில் முதன்முதலில் இப்போதுதான் எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில்பதிவிட்ட செய்தியில் “ இனிமேல் டெஸ்லா பங்குகளை விற்கும திட்டம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பாக 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியது தொடர்பாக, பெடரல் வர்த்தக ஆணையம் மஸ்க்கிடம் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

click me!