elon musk buys twitter : ட்விட்டர் சமூக வலைதளத்தை 4,100 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அனுகியுள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை 4,100 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அனுகியுள்ளார்.
12 % உயர்வு
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும்54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் சந்தையில் ட்விட்டரின் பங்குகள் 12 சதவீதம் உயர்ந்தன.
சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்.
மஸ்க் விருப்பம்
ஆனால், இப்போது ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் 4,100 கோடிக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரெட் டெய்லருக்கு எலான் மஸ்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ ட்விட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு ரொக்கமாகக் கொடுத்து வாங்க விரும்புகிறேன். நான் ட்விட்டரில் முதலீடு செய்வதற்கு முந்தைய நாளில் 54% ப்ரிமியம் மற்றும் முதலீடு செய்வதற்கு முந்தைய நாளில் 38 சதவீதம் ப்ரியமும் தருகிறேன்.
என்னுடைய இந்த சலுகை சிறந்தது இறுதியான சலுகையாக இருக்கும் . இதை ஏற்காவிட்டால், நான் பங்குதாரராக இருப்பதை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும்.
பேச்சு சுதந்திரம்
உலகம்முழுவதும் சுதந்திரமான பேச்சுரிமைக்கு சிறந்த தளமாக ட்விட்டர் இருப்பதாக நான் நம்புகிறேன். ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், செயல்படவும் பேச்சுரிமை என்பது அவசியம்.
நான் முதலீடு செய்ததில் இருந்துகவனித்ததில் அதன் தற்போதைய வடிவத்தில் நிறுவனம் மேம்படவோ அல்லது இந்த சமூகத்தின் வளர்சிக்கு சேவை செய்யவோ முடியாது என்பதை நான் உணர்கிறேன். ட்விட்டரை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
9.2 சதவீத பங்குகள்
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை 7.35 கோடி டாலருக்கு அவரின் ரோவோக்கபில் அறக்கட்டளை மூலம் வாங்கினார். இதன்மூலம் ட்விட்டர் நிறுவனத்தில் அதிகபட்சமாக பங்குகளை வைத்துள்ள தனிநபராகினார் மஸ்க்.ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் வழங்கிய அறிவுறுத்தல்களில், ட்விட்டரின் ப்ளூ சப்கிரிப்ஸன் சேவையில், குறைந்தபட்ச சேவைக்கட்டணம் வசூலித்தல், விளம்பரங்களுக்குத் தடை, கிரிப்டோகரன்ஸியில் பணம் செலுத்துதல் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது