பெட்ரோல் பங்க்களின் அறிவிப்பால் அடுத்த அடி !!லாரிகளைஇயக்க மறுப்பதால் விலைவாசி உயரும் அபாயம்

First Published Jan 8, 2017, 5:32 PM IST
Highlights


பங்க் உரிமையாளர்கள் முடிவை வாபஸ் பெறாவிட்டால் லாரிகளை இயக்க மாட்டோம் - உரிமையாளர் சங்க அறிவிப்பால் விலைவாசி உயரும் அபாயம்

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் திடீர் முடிவை மாற்றிகொள்ளாவிட்டால் நாங்கள் டீசல் பிடிக்க முடியாது லாரிகளை இயக்க முடியாது என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்ததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அத்யாவசிய பொருட்களின் தேவையும் , விலைவாசி உயரவும் வாய்ப்பு உள்ளது. இதுவும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில் லாரிகள் தினமும் , ரூ.30 ஆயிரம் , 40 ஆயிரத்துக்கு டீசல் நிரப்புவோம். 

நாடெங்கும் ரூபாய் நோட்டு பிரச்சனை உள்ள நிலையில் 30 ஆயிரம் 40 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு லாரிக்கும் பணத்துக்கு எங்கே போவோம். ஆகவே கார்டு மூலம் பணம் நிரப்ப முடியாது என்று முடிவெடுத்தால் நாங்கள் டீசல் நிரப்ப முடியாது லாரிகளை இயக்க முடியாது என்று தெரிவித்தார்கள்.

இதனால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. இது பொதுமக்கள் மீது மேலும் ஒரு தாக்குதல் தான்.

click me!