“பதுக்கி வைத்தவை வெளியே வந்தது” - பருப்பு ரூ.30 குறைவு, அரிசி ரூ.2 உயர்வு

First Published Jan 9, 2017, 9:52 AM IST
Highlights


மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பருப்பு வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிமாக பெய்ததால் மேற்கண்ட மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும, ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா, மாளவியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் பருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதே வேளையில், பண பிரச்சனையால் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பருப்புகள் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது.

இது போன்ற காரணங்களால் பருப்பு விலை சரிய தொடங்கியுள்ளது. கடந்த மாதம் துவரம் பருப்பு (முதல் ரகம்) கிலோ ரூ.120க்கு விற்கப்பட்டது. தற்போது 90க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு (2ம் ரகம்) 90ல் இருந்து 70க்கும், உளுத்தம் பருப்பு (முதல் ரகம்) 130ல் இருந்து 110, உளுந்தம்பருப்பு (2ம் ரகம்) 120ல் இருந்து 90க்கும் விற்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பால் பாசிப்பருப்பு 110ல் இருந்து 70, பாசிப்பருப்பு (2ம்ரகம்) 100ல் இருந்து 60 ஆகவும் விலை குறைந்துள்ளது.

அரியானா, சண்டிகர், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் கடலை பருப்பு ரூ.140ல்இருந்து ரூ.115 ஆகவும் விலை சரிந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அதிகளவில் லாரிகளில் அரிசி வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஆந்திரா ஸ்டீம் அரிசி (25 கிலோ மூட்டை) ரூ.1100ல் இருந்து ரூ.1000, ஆந்திரா ஸ்டீம் அரிசி (2ம் ரகம்) ரூ.1000ல் இருந்து ரூ.900, கர்நாடகா ஸ்டீம் அரிசி ரூ.1250ல் இருந்து ரூ.1150, கர்நாடகா ஸ்டீம் அரிசி (2ம் ரகம்) ரூ.1150ல் இருந்து ரூ.1000 விலை குறைந்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், நெல்வரத்து குறைவினாலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. 1 கிலோ இட்லி அரிசி (முதல் ரகம்) ரூ.36ல் இருந்த ரூ.40க்கு, இட்லி அரிசி (2ம் ரகம்) ரூ.32ல் இருந்து ரூ.36, ரூபாய் பொன்னி ரூ.30ல் இருந்து ரூ.32, ரூபாய் பொன்னி (2ம் ரகம்) ரூ.28ல் இருந்து ரூ.30, டீலக்ஸ் பொன்னி ரூ.38ல் இருந்து ரூ.40.

டீலக்ஸ் பொன்னி (2ம் ரகம்) 34ல் இருந்து ரூ.36, அதிசய பொன்னி ரூ.40ல் இருந்து ரூ.42, பாபட்லா (முதல்ரகம்) ரூ.46ல் இருந்து ரூ.48, பாபட்லா (2ம் ரகம்) ரூ.42ல் இருந்து ரூ.44, வெள்ளை பொன்னி அரிசி (முதல் ரகம்) ரூ.54ல் இருந்து ரூ.56, வெள்ளை பொன்னி அரிசி (2ம் ரகம்) ரூ.50ல் இருந்து ரூ.52, பொன்னி பச்சரிசி (முதல் ரகம்) ரூ.48ல் இருந்து 50, பொன்னி பச்சரிசி (2ம் ரகம்) ரூ.44ல் இருந்து ரூ.46, மாவு பச்சரிசி ரூ.30ல் இருந்து ரூ.32 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

click me!