
கிரிப்டோகரன்ஸியான பிட்காயின், எதிரியம் ஆகிய டிஜி்ட்டல் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் இன்னும் 3 நாட்களுக்குள் விற்பனை செய்து காசாக்கிவிடுங்கள். இல்லாவிட்டால், ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரிப்டோ பரிவர்த்தனைக்கு 30 சதவீதம் வரிவிதிப்பு அமலுக்கு வந்துவிடும்.
வரிவிதிப்பு
ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரிப்டோகரன்ஸியை வைத்திருப்பவர்கள், முதலீடு செய்தவர்கள், பரிவர்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் பேரிடி காத்திருக்கிறது.கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைக்கு வரிவிதிக்கும் நிதி மசோதாவுக்கு மக்களவை கடந்த வாரம் ஒப்புதல் அளி்த்து. இந்த வரிவிதிப்பு மாற்றம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகிறது.
இதன்படி, கிரிப்டோகரன்ஸி மூலம கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதுதவிர முதலீட்டாளர்கள் ஒவ்வொருமுறை கிரிப்டோகரன்ஸியை விற்கும்போதும், வாங்கும்போது ஒரு சதவீதம் டிசிஎஸ் பிடிக்கப்படும்.
இந்த புதியவிதிகளால், கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்தவர்கள் இழப்பு ஏதாவது சந்தித்தாலும், அப்போதுகூட மத்திய அரசுக்குவரி செலுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.
ஊகவாணிபம்
கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனையின் மூலம் கிடைக்கும் லாபம், ஊகவாணிபத்தின் மூலம் கிடைக்கும் வருவாயாகவே கருதப்படும். குதிரைப்பந்தயத்தில் ஆதாயம் பெற்றால் 28 சதவீதம் வரி, கூடுதலாக செஸ்2 சதவீதம் என 30 சதவீதம் வரிவிதிக்கப்படும். அதேபோன்று கிரிப்டோகரன்ஸியிலும் 30சதவீதம் வரி விதிக்கப்படும்.
2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டுக்கு ரூ.10ஆயிரத்துக்குஅதிகமாககிரிப்டோ பேமெண்ட் செய்தால் ஒரு சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும். ஆனால், வருமானவரி செலுத்துவோர், இந்துக் கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிரிப்டோவில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம்வரை முதலீடு செய்யலாம்.
ஆதலால் கிரிப்டோகரன்ஸியை கைவசம் வைத்திருப்பவர்கள் வரும் 31ம்தேதிக்குள் பரிமாற்றம் செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி முதல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டியதிருக்கும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.