
விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தனது உரையில், விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி. ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருமானம் மற்றும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கும். நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.