credit card: best credit cards: கிரெடிட் கார்டு வாங்க முடிவா! 6 முக்கிய அம்சங்களை படிச்சுட்டு முடிவு எடுங்க

By Pothy RajFirst Published Jun 24, 2022, 3:27 PM IST
Highlights

credit card: best credit cards: கிரெடிட் கார்டு(credit card) என்பது பேமெண்ட் செலுத்த பயன்படும் கருவி மட்டும் என்று நினைத்தால் தவறானது. கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டாகவும், ஒழுங்காகவும் பயன்படுத்தினால் நாம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். கிரெடிட் கார்டு மூலம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தலாம், கடனுக்கு பொருட்களை, சேவையை வாங்கி, எந்தவிதமான வட்டியும் 50 நாட்களுக்குள் இல்லாமல் செலுத்தலாம். 

கிரெடிட் கார்டு (credit card) என்பது பேமெண்ட் செலுத்த பயன்படும் கருவி மட்டும் என்று நினைத்தால் தவறானது. கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டாகவும், ஒழுங்காகவும் பயன்படுத்தினால் நாம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். கிரெடிட் கார்டு மூலம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தலாம், கடனுக்கு பொருட்களை, சேவையை வாங்கி, எந்தவிதமான வட்டியும் 50 நாட்களுக்குள் இல்லாமல் செலுத்தலாம். 

ஆதலால் கிரெடிட் கார்டை தேர்வு செய்வதிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் அதிகமான அக்கறை செலுத்தினால் பணத்தை சேமிக்க முடியும். 

கிரெடிட் கார்டு வாங்க நினைப்பவர்கள் 6 முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

தகுதி

பல வங்கிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை, பல்வேறு வகைகளில் வழங்குகின்றன. ஆனால் அந்த கார்டுகளில் பலவற்றுக்கு நாம் தகுதியில்லாமல் இருக்கலாம். சில கார்டுகளை வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும்..ஆதலால், ஏதாவது ஒரு கிரெடிட் கார்டை வாங்குவதற்குப் பதிலாக நம்முடைய மாதாந்திரச் செலவு, வருமானம், பணம் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அறிந்து கார்டை தேர்வு செய்ய வேண்டும்.

 சில கார்டுகளுக்கு அதிகமான விசாரணை தேவைப்படும், அதில் தோல்வி அடையும்பட்சத்தில் கார்டு வாங்கும் செயலில் பின்னடைவு ஏற்பட்டு அடுத்தடுத்து சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால் சரியான கார்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பலன்களை வரிசைப்படுத்துதல்

அனைத்து கிரெடிட் கார்டுகளுமே நமக்குச் சரியானதாக இருக்காது. சில கார்டுகளில் அதிகமாக செலவு செய்தால் கேஷ்பேக் அதிகம் கிடைக்கும், சில கார்டுகளில் ரிவார்ட் புள்ளிகள் மட்டும் கிடைக்கும், விமானநிலையங்களி்ல் பொருட்கள் வாங்க சலுகை கிடைக்கும். இதில் நமக்கு எந்தக் கார்டு தேவையோ அதைப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் செலவிடும் முறைக்கு ஏற்றார்போல் கார்டை வாங்கலாம். 

உதாரணமாக அடிக்கடி குடும்பத்தாருடன் ஹோட்டலில் சாப்பிடுவராக இருந்தால் ஹோட்டலில் தள்ளுபடி அளி்க்கத் தனியாக சலுகைகள் அளிக்கும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. அதைத் தேர்ந்தெடுக்கலாம். 

பட்ஜெட்

கிரெடிட் கார்டு மூலம் மாதம் எவ்வளவு செலவிடுவோம் என்பதை திட்டமிட்டு கார்டை வாங்க வேண்டும். அதாவது செலவிடும் முறையை பட்டியலிட்டு அதற்கு ஏற்றார்போல் கார்டை வாங்க வேண்டும். 

உதாரணமாக, மாதத்துக்கு ரூ.20ஆயிரம் செலவிடுவராகஇருந்தால், 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கும்கார்டை தேர்ந்தெடுக்கலாம். இதனால் 2ஆயிரம் சேமிக்க முடியும். எந்த நிறுவனக் கார்டில் செலவிட்டால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு கார்டு வாங்க வேண்டும். 

சில கார்டுகள் ஒரே மாதிரியான பலன்களை அளித்தாலும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவிடும்போதுதான் பலன் கிடைக்கும் எனக் கட்டுப்பாடு விதித்திருப்பார்கள். அதைப் பார்த்து கார்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருபோதும் கிரெடிட் கார்டில் தரப்பட்டிருக்கும் அளவைவிட கூடுதலாக செலவிடவும் கூடாது. அப்போதுதான் அதிகமான பலன்களை அடைய முடியும். வாங்கிய பொருட்களுக்கான தொகையையும் வட்டி இல்லாமல் விரைவாகச் செலுத்த முடியும்

கடன் அளவு

கிரெடிட் கார்டு ஒருவர் வாங்கிவிட்டால் அவரின் வருமானம், கிரெடிட் ஸ்கோர், திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாக வைத்து வங்கிகள் கார்டில் செலவிடும் அளவை நிர்ணயித்து உயர்த்துகின்றன. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான செலவிடும் வரம்பை கார்டுக்கு வழங்குகின்றன.

 இந்த கடன் அளவு என்பது நம்முடைய வருமானம், செலுத்தும் திறன், கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை வைத்து முடிவு எடுக்கப்படும். ஆதலால் அதிகமான கிரெடிட் லிமிட் அளித்துள்ளதால், அதிகமாக செலவிடலாம் என்பதல்ல. எதிர்பாராத செலவினங்கள், அவசரச் செலவுகளை செய்துகொள்ளலாம். அதை திருப்பிச் செலுத்தும்போது கிரெடிட் ஸ்கோர் குறையாமல் கொண்டு சென்று அடுத்த தரத்துக்கான கார்டுக்கு செல்ல முடியும்

ஆண்டுக் கட்டணம்
கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக்கட்டணம் இருக்கிறதா, இதரக் கட்டணங்கள் வசூலிக்கிறார்களா என விசாரிக்க வேண்டும். அதிகமானப் பலன்களைப் பெற ப்ரீமியம் கிரெடிட் கார்டு தேவை என்றால், ஆண்டுக் கட்டணம் பாதிக்காது. 

அதாவது ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவுசெலவிடும்போது, ஆண்டுக் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள். ஆண்டுக்கட்டணம் செலுத்தும் கிரெடிட் கார்டுகள், ஆண்டுக்கு செலவு செய்யும் இலக்கும் வைப்பார்கள். ஆனால் அதுபோன்ற கார்டுகள் நமது பட்ஜெட்டுக்கு சரியாக இருக்குமா என்பதை அறி்ந்து கார்டை வாங்க வேண்டும்.

கூடுதல் வசதிகள், சலுகைகள்
பெரும்பாலான கிரெடிட் கார்டுகள்  சலுகைகள், கேஷ்பேக், தள்ளுபடிகள் அளித்தாலும், இதையும் கடந்து சிறப்பு சலுகைகள் அளிக்கும் கிரெடிட் கார்டுகள் குறித்து தேடி கார்டை வாங்க வேண்டும். 

குறிப்பாக பயணக்காப்பீடு, விமானநிலையத்தில் வரியில்லாமல் பொருட்கள் வாங்குதல், பரிசுகள், கிரெடிட் கார்டில் குறைந்த வட்டியில் கடன், எளிதான இஎம்ஐ, சிறப்புத் தள்ளுபடி ஆகியவற்றை ஆய்வு செய்து கார்டு வாங்ககலாம். 
குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால், சிறப்புச் சலுகை, ஹோட்டல் முன்பதிவுக்கு சலுகை ஆகியவற்றை பார்த்து கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் செலவிடும் பணத்துக்கு அதிகமான சலுகைகள் அளிக்கும் கார்டை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்
 

click me!