covaxin: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி சப்ளையை நிறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு

By Pothy Raj  |  First Published Apr 3, 2022, 10:52 AM IST

covaxin :ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதை உலக சுகாதார அமைப்பு நிறுத்துகிறது. 


ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதை உலக சுகாதார அமைப்பு நிறுத்துகிறது. 

ஆய்வு

Tap to resize

Latest Videos

பாரத் பயோடெக் நிறுவனத்தில் சமீபத்தில் ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பு, அங்கு அந்த நிறுவனம் வசதிகளை மேம்படுத்தவும், பற்றாக்குறைகளை சரி செய்யவும் அனுமதித்தது அதைத் தொடர்ந்து சப்ளையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை பெற்றுள்ள நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் என்ன நடவடிக்கை எனத் தெரிவிக்கவில்லை. 

பாதுகாப்பானது

கோவாக்சின் தடுப்பூசி சக்திவாய்ந்ததுதான், பாதுகாப்பு பிரச்சினை ஏதுமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கோவாக்சின் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், அந்த மருந்தின் சப்ளையில் பாதிப்பைஏற்படுத்தும். 

கடந்த மாதம் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்குப்பின் பாரத் பயோடெக் நிறுவனம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், கோவாக்சின் உற்பத்தியை குறைக்க இருப்பதாகத் தெரிவித்ததது. மேலும், நிறுவனத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. 

மறுப்பு

இந்தஅறிவிப்புக்கு அடுத்ததாக, உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையே ஐ.நாவுக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளது.  ஆனால், இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் எந்தவிதமான பதிலும் அளிக்க மறுத்துவிட்டது.

உற்பத்திக் குறைப்பு

பாரத் பயோடெக் நிறுவனம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவருவதையடுத்து, தேவையும் குறைந்துவருவதால்,  கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தயாரிப்பை படிப்படியாகக் குறைக்க இருப்தாக பாரத் பயோடெக் நிறுழனம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கோரப்பட்டிருந்த ஆர்டருக்கான சப்ளையும் ஏறக்குறைய முடிந்துவிட்டதால், தடுப்பூசி  தயாரிப்பை குறைக்க இருக்கிறோம்.  பாரத் பயோடெக் நிறுவனம் இனிவரும் நாட்களில் மருந்து தயாரிப்பு வசதிகளை அதிகப்படுத்துதல், பராமரிப்பு, நவீன வசதிகளை உண்டாக்குதலில் கவனம் செலுத்த இருக்கிறது. 

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வந்து பார்வையிட்டு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தது.
 

click me!