இலங்கையில் எந்தமாதிரியான பொருளாதார நெருக்கடி நிலவுகிறதோ அதேபோன்ற பொருளாதார நெருக்கடியான சூழல்களை பாகிஸ்தானும் விரைவில் சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையில் எந்தமாதிரியான பொருளாதார நெருக்கடி நிலவுகிறதோ அதேபோன்ற பொருளாதார நெருக்கடியான சூழல்களை பாகிஸ்தானும் விரைவில் சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அன்னியச் செலாவணி
undefined
பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 291.50 கோடி டாலர் என்ற மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 1205 கோடி டாலர் மட்டுமே இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு இருக்கும் வெளிநாட்டுக் கடன், சீனாவிடம் இருந்து பெற்ற கடனுக்கான வட்டி, கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற நெருக்கடிகள் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. ஆதலால், பாகிஸ்தானும் விரைவில் சர்வதேச நிதியத்தின் உதவியை நாடலாம் என பிஸ்னஸ் ரெக்காடர் செய்திகள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து குறைவு
பாகிஸ்தானின் அன்னியச் செலவாணி கையிருப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே தொடர்ந்து குறைந்து வந்தது. நாட்டில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், அன்னியச் செலவாணி கையிருப்புகுறைவு, கடனில் சிக்கத் தவிப்பு, நிதிப்பற்றாக்குறை, ஏற்றுமதிக் குறைவு, அன்னிய நேரடி முதலீடு குறைவு போன்ற பாகிஸ்தான் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்கு தள்ளி வருகிறது.
இலங்கையாக மாறும்
இலங்கையில் தற்போது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ள பொருளாதாரச் சிக்கல், சீரழிவு போன்று பாகிஸ்தானில் விரைவில் நடக்கும். அரசிடம் அன்னியச் செலவாணி கையிருப்பு இல்லாத நிலை வரும்போது இறக்குமதி செய்யமுடியாது, பொருட்களின் விலை கடுமையாகஅதிகரிக்கும், பணவீக்கம் அதிகரிக்கும். அந்த சூழல் வரும்போது, இலங்கையில் மக்கள் கொந்தளித்ததுபோன்ற சூழல் உருவாகலாம்.
அன்னிய செலவாணி மாற்றுவதற்காக ஒட்டுமொத்தமா 1855 கோடி டாலர்களும், வர்த்தக வங்கிகளிடம் நிகர செலவாணி கையிருப்பு650 கோடி டாலரும் இருக்கிறது என்று பிஸ்னஸ் ரெக்காடர் செய்தி தெரிவிக்கிறது.