ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல், சமையல் எரிவுவாய் ஆகியவற்றின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை தினசரி அடிப்பையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாள் அல்லது 16-ம் ஆண்டு அன்று சமையல் எரிவாயு விலை திருத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடைசியாக டிசம்பர் 22-ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்டது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1929.50 ஆக இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று மீண்டும் சிலிண்டர் விலை திருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.918.50 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 1ஆம் தேதி இதையெல்லாம் பண்ண முடியாது.. பணம் தொடர்பான ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பொதுவாக சிலிண்டர் விலையை உயர்த்தும் போது இரட்டை இலக்கங்களில் உயர்த்தப்படுவதாகவும், விலையை குறைக்கும் போது சொற்ப அளவிலேயே குறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே புத்தாண்டில் சிலிண்டர் விலை அதிரடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 4.50 ரூபாய் குறைந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.