ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,000! 2024 புத்தாண்டில் புதிய உச்சத்தை எட்டும் தங்கம்!

By SG Balan  |  First Published Dec 31, 2023, 4:35 PM IST

2024 புத்தாண்டில் ஆண்டில் தங்கத்தின் விலை கிராமுக்கு 7,000 ரூபாயைத் தொடும் என தங்க வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.


2024ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கிராமுக்கு 7,000 ரூபாயைத் தொடும் என தங்க வணிக நிபுணர்கள் கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 22 காரட் ரூ.58,550 ஆகவும் 24 காரட் ரூ.63,870 ஆகவும் உள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. மே 4 அன்று, உலகச் சந்தைகளில் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹6,184 ஆக உயர்ந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 16 அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.6,191 என வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது என்று Commtrendz நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் சொல்கிறார்.

Tap to resize

Latest Videos

மேலும், புத்தாண்டில் தங்கத்தின் விலை 2,400 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு நிலையாக இருந்தால், தங்கத்தின் விலை கிராமுக்கு 7,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என்றும் தியாகராஜன் கூறுகிறார். பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், ரூபாய் மதிப்பு குறைந்து, வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் குறைந்து தங்கத்தின் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கிறார்.

2023ஆம் ஆண்டு ரிசிர்வ் வங்கியின் தங்கப் பத்திர விற்பனை குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகியுள்ள நிலையிலும், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது என்று கோடக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவரும், கமாடிட்டி ரிசர்ச் பிரிவின் தலைவருமான ரவீந்திர ராவ் கருதுகிறார்.

கடந்த சில காலாண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் தேவை கூடியிருக்கிறது. விலைவாசி உயர்வு மற்றும் பருவம் தப்பிப் பெய்யும் மழை ஆகியவை இந்தியாவில் தங்க நுகர்வைப் பாதித்துள்ளன. மறுபுறம், சீனாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டில் நகைகளின் தேவை அதிகரித்துள்ளது.

click me!