வருமானக் கணக்கைத் தவறாகக் காட்டிய குற்றத்துக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் 200 சதவீதம் வரை வரி அபராதம் செலுத்தவேண்டிய இருக்கும்.
வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, வரி விலக்குகளை கோரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நடப்பு ஆண்டு அல்லது முந்தைய ஆண்டுகளுக்காக தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் கோரப்படும் வரி விலக்குகள் தொடர்பாக சந்தேகம் எழுந்தால் வருமான வரித்துறை அதற்கான ஆதாரத்தைக் கோரலாம்.
தனிநபர்கள் உரிய ஆதாரத்தை வழங்கியிருந்தால், கவலைப்படத் வேண்டியதில்லை. ஆதாரத்தை வழங்க முடியாவிட்டால் அல்லது வருமான வரித்துறை ஆதாரத்தில் திருப்தி அடையவில்லை என்றால், கோரப்படும் வரி விலக்குகள் ஆதாரமற்றதாகக் கருதப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வருமான வரித்துறை அபராதம் விதிக்கலாம்.
2 ஆண்டுகளில் 1,240.6 மில்லியன் டாலர் ஆயுர்வேத பொருட்கள் ஏற்றுமதி: அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தகவல்
வரி செலுத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வரி விலக்கு கோருவதற்கான ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். பிரிவு 10 (13A) இன் கீழ் வீட்டு வாடகை, பிரிவு 10 (14) இன் கீழ் உதவியாளரை பணியமர்த்துவது ஆகியவற்றிற்கு வழங்கப்படும் விலக்குகள் அல்லது பிரிவு 24 (b) இன் கீழ் வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை போன்றவை குறித்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
2021-22 நிதி ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளுக்குக் கோரப்பட்ட விலக்குகளுக்கான ஆதாரத்தைக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
7.5 லட்சம் பேருக்கு ஒரே நம்பரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா முறைகேடு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்
"போலி வாடகை ரசீதுகளின் அடிப்படையில் அதிக வரி விலக்கு கோருவது, தேவையான ஆவணங்கள் இல்லாமல் பிரிவு VI-A இன் கீழ் விலக்குகளை கோருவது, உண்மையை தவறாகச் சித்தரிப்பது அல்லது மறைப்பது போன்றவை வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் வருமானத்தை தவறாகக் காட்டுவதாகக் கருதப்படுகிறது" என டி.வி.எஸ். அட்வைஸர்ஸ் வணிக ஆலோசனை நிறுவனத்தின் சிஇஓ திவாகர் விஜயசாரதி சொல்கிறார்.
Tax2win.in இணையதளத்தின் சிஇஓ அபிஷேக் சோனி கூறுகையில், "வருமான வரி தாக்கல் செய்யும்போது வரி செலுத்துவோர் வரி திரும்பப் பெறுவதற்கு போலி விலக்குகளைக் கோருவதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கு வாடகை செலுத்தப்படுவதாகக் கூறி ஒருவர் வீட்டு வாடகைக்கான வரி விலக்கு கோரியிருந்தால், பெற்றோர்கள் தங்கள் வருமான வரி கணக்கில் இதைப்பற்றி தெரிவிக்கத் தவறினால், வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்கிறார்.
வரி செலுத்துவோர் ஆவண ஆதாரங்களை வழங்கவில்லை என்றால், வருமான வரித்துறையிடம் வருமானத்தை தவறாகக் காட்டினால் அபராதம் மற்றும் அபராத வட்டியும் விதிக்கப்படும். இதுபோன்ற வருமானக் கணக்கைத் தவறாகக் காட்டிய குற்றத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 270A இன் கீழ் 200% வரை வரி அபராதம் செலுத்தவேண்டிய இருக்கும்.
வருமான வரிச் சட்டங்களின் கீழ் வருமானத்தை தவறாகப் புகாரளிப்பதற்கும் குறைவாக அறிக்கை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சோனி கூறுகிறார், "வருமானத்தை தவறாகப் புகாரளிப்பதற்கும் வருமானத்தை குறைவாக அறிக்கை செய்வதற்கும் உள்ள வித்தியாசம், வழக்கின் உண்மைகள் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் விளக்கத்தின் அடிப்படையிலானது. வருமானத்தை குறைவாக அறிக்கை செய்தால், மதிப்பீட்டு அதிகாரி வரியில் 50% வரை அபராதம் விதிக்கலாம். பொருந்தக்கூடிய வட்டியுடன் செலுத்த வேண்டும்."