
பொதுவாக வங்கியில் பண பரிவர்த்தனை செய்வதே பணம் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் சில சமயங்களில் வங்கி ஊழியர்கள் கவனக்குறைவால் சில பிரச்சனைகள் நடந்துவிடுகின்றன. கடந்த வருடம் ஏப்ரலில் சிட்டி வங்கியில் (Citibank) அப்படி ஒரு கவனம் குறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வங்கியில் தவறுதலாக ஒரு வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு $280 (இந்திய மதிப்பில் ₹24,500) அனுப்பவதற்கு பதிலாக $81 டிரில்லியன் (₹7,000 லட்சம் கோடிக்கு மேல்) பணம் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி தவறுதலாக அனுப்பப்பட்ட பணம் என்ன ஆனது? இதன் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் நாணயக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதில் பண பரிவர்த்தனை தவறுதலாக நிகழ்ந்துவிட்டது என்றும், வங்கியிலிருந்து எந்த பணமும் வெளியேறவில்லை என்றும் கூறியுள்ளார்கள். மேலும், இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டது. வங்கியில் பல பாதுகாப்பு கண்காணிப்புகள் உள்ளதால் உடனடியாக அனைத்து உள்ளீடுகளும் சரிபார்க்கப்படும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பணம் டெபாசிட் லிமிட் எவ்வளவு? பேங்க் ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!
இந்த பரிவர்த்தனையில் நடந்த தவறினை மொத்த ஊழியர்களும் ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்துள்ளனர். வெகுநேரத்திற்கு பின்னரே ஊழியர் ஒருவர் இந்த பணபரிமாற்றத்தைக் கண்டறிந்துள்ளார். பரிவர்த்தனை நடந்து ஒன்றரை மணிநேரம் கழித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் வாடிக்கையாளரின் கணக்கு சரிசெய்யப்பட்டது. இந்த பண பரிவர்த்தனை விரைவில் திரும்பப் பெறப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 124 காலி பணியிடங்கள்! டிகிரி இருந்தால் போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கடந்த வருடம் மட்டும் சிட்டி வங்கியில் 100 கோடிக்கும் மேலாக இப்படி பண பரிவர்த்தனையில் பிழைகள் நடந்ததாகவும் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் அறிக்கை ஒன்றினை மேற்கோளாக காட்டி சொல்லப்படுகிறது. FT ஒரு உள் அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 13 வழக்குகளிலிருந்து குறைந்திருந்தாலும், அமெரிக்க வங்கித் துறையில் $1 பில்லியனுக்கும் அதிகமான கிட்டத்தட்ட தவறவிட்ட நிதிகள் அசாதாரணமானவை என்று அறிக்கை கூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்திகளின்படி, சிட்டி வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கோர்பட் அப்பதவியிலிருந்து விலகினார். அதற்கு அந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் உள் அமைப்புகளில் இருந்த சிக்கல்கள் தான் காரணமாக சொல்லப்பட்டது.
சிட்டி வங்கியில் இந்த மாதிரியான பண பரிவர்த்தனை சிக்கல்கள் புதிதல்ல. சிட்டி வங்கியின் தரவு மேலாண்மை சிக்கல்களை சரி செய்யாத காரணத்தால் கடந்த வருடம் மட்டும் சுமார் $136 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.