சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் பாதுகாப்பானதா? பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

Published : Feb 03, 2022, 05:09 PM ISTUpdated : Feb 03, 2022, 05:10 PM IST
சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் பாதுகாப்பானதா? பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

சுருக்கம்

சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) பாதுகாப்பானதா, அதில் என்னவிதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) பாதுகாப்பானதா, அதில் என்னவிதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இ-பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் சிப் பொருத்தப்பட்ட அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இ-பாஸ்போர்ட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், அந்த சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட் குறித்த அம்சங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் குறித்தும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் வி.முரளிதரண் மாநிலங்களவையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. பாஸ்போர்ட் பெறும் நபரை நேரடியாகச் சந்திக்காமல் வழங்கப்படுவது இ-பாஸ்போர்ட். இந்த இ-பாஸ்போர்டில் ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதாவது ஆர்எப்ஐடி தொழில்நுட்பம் கொண்ட ரேடியா அலைகள் அடையாள சிப், பாஸ்போர்ட்டின் முன்அட்டை, பின்அட்டையிலும் பொருத்தப்படும்.

இந்த சிப் என்பது, ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான(ஐசிஏஓ) விதிகளுக்கு உட்பட்டு பொருத்தப்படுகிறது. இந்த சிப் பொருத்துவதன் நோக்கம், சர்வதேச தரத்தில் பயண ஆவணங்கள் இருக்கிறது என்பதை உறுதிசெய்யத்தான். 

சிப்-பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் குறித்த விவரங்கள், அவர் பயணம் செய்த நாடுகள், தரையிறங்கிய நாடுகள், அவர் மீதான குற்றங்கள், புகார்கள், நிலுவை வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட சிப்-பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டில் பதிவேற்றம் செய்யப்படும்.

சாதாரண பாஸ்போர்ட் புத்தகத்தில் பதிவு செய்வதைப் போன்று சிப்பிலும் பதிவேற்றம் செய்யப்படும். இந்த சிப்பில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தாலோ அல்லது சேதப்படுத்தினாலோ கணினி கண்டறிந்து,  பாஸ்போர்ட்குரிய நபரை அடையாளம் காண முடியாது எனத் தெரிவிக்கும்.  
இதன் மூலம் போலியாக பாஸ்போர்ட் தயாரிப்பது தடுக்கப்படும், பாஸ்போர்ட் சேதமடையாமல் பாதுகாக்கப்படும். இ-பாஸ்போர்ட் தவிர்த்து ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாஸ்போர்டும் தரம் உயர்த்தப்படும்

இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்

இ-பாஸ்போர்ட் வழங்கும் ஒப்பந்தம் டிசிஎஸ் நிறுவனத்திடம்தான் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் தேஜ் பாட்லா கூறுகையில் “இ-பாஸ்போர்ட் வழங்கும் தொழில்நுட்பம்தான் எங்களுடையது. ஆனால், பாஸ்போர்ட் வழங்குவது, அச்சடிப்பது அரசின் வசம்தான் இருக்கிறது. பாஸ்போர்ட் அட்டையில் மின்னனு சிப் பொருத்துதல் என்பது பாதுகாப்புக்குரிய அம்சம். உலகின் சில நாடுகளில் மட்டும் இருக்கும் அம்சத்தை இந்தியாவும் அறிமுகப்படுத்த உள்ளது” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!