China :2022ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்கைக் குறைத்துக்கொண்ட சீன அரசு, அதேசமயம் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு தொகையை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
2022ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்கைக் குறைத்துக்கொண்ட சீன அரசு, அதேசமயம் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு தொகையை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
2-வது மிகப்பெரிய நாடு
ஆசியாவிலேயே மிகப்பெரிய பொருளாதாரத்தையும், உலகளவில் 2-வது பொருளாதாரத்தையும் கொண்டுள்ள சீனா தனது பொருளாதார வளர்ச்சி இலக்கை 5.5% மாக 2022ம் ஆண்டில் நிர்ணயித்தது சொந்த நாட்டுமக்களுக்கே வியப்பாக இருக்கிறது. கடந்த ஆண்டில் 6.1% ஜிடிபி வளர்ச்சி இருந்தது.
இதை படிக்க மறக்காதிங்க: முதல் விமானம் மூலம் உக்ரைனிலிருந்து மக்களை அழைத்து வந்த சீனா
பிரதமர் லி கெக்கியாங் தனது பட்ஜெட் அறிக்கையை தேசிய மக்கள் காங்கிகரஸ் உறுப்பினர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது இந்த தகவலைத் தெரிவித்தார்.
ஜிடிபி இலக்கு
அப்போது அவர் பேசுகையில் “ கடந்த 2021ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 8.1% வளர்ச்சி அடைந்து கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து. ஆனால், கடந்த ஆண்டில் நம்முடைய ஜிடிபி இலக்கு 6 சதவீதத்துக்கு மேல்தான் வைத்திருந்தது.
2022ம் ஆண்டில் 1.10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்க இருக்கிறோம். ஜிடிபியில் இருக்கும் பற்றாக்குறையையும் 2.8% அளவுவைத்திருக்க நினைக்கிறோம். சீன ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை , பாதுகாப்பு, வளர்ச்சி நலன்களை பாதுகாக்க சீன மக்கள் ராணுவம் அனைத்துவிதமான நெகிழ்வான நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்க வேண்டும். ” எனத் தெரிவித்தார்
சீன அரசு தனது பட்ஜெட்டில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைக்கான தொகையை கடந்த ஆண்டைவிட 7.1% உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு 20900 கோடி டாலர் ஒதுக்கி இருந்தது. இந்த ஆண்டு 23000 கோடி டாலர் ஒதுக்கியுள்ளது.
3 மடங்கு அதிகம்
இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் தொகை ரூ5.25 லட்சம் கோடியாகும். ஆனால் சீனாவின் பட்ஜெட் தொகை என்பது இந்தியாவின் தொகையைவிட 3 மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு முதல் முறையாக பாதுகாப்பு துறைக்கு 20000 டாலரை ஒதுக்கியது சீன அரசு.
கடந்த 2021ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் நடந்தசண்டைக்குப்பின், சீன அரசு, பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகமாக அதிகரித்துள்ளது