கடந்த சில வருடங்களாகவே மக்கள் மத்தியில் பணம் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதே போல பணவீக்கம் கடந்த சில காலமாக அதிகரித்து வருவதால், நிதித் திட்டமிடல் குறித்தும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர் என்றே கூறலாம். திருமணம் துவங்கி, குழந்தைகளின் எதிர்காலம், ஓய்வு பெரும் காலம் குறித்து அனைத்திற்கும் முன்கூட்டியே நிதி திட்டமிடல் பற்றி மக்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.
சரி நீங்களும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அவர்களின் மேற்படிப்பு முதல் திருமணம் வரையிலான பொறுப்புகளை எந்தப் பதற்றமும் இல்லாமல் சமாளிக்க விரும்பினால், அவர்களுடைய பிறப்பிலிருந்தே அதற்கான நிதித் திட்டமிடலைத் தொடங்குங்கள், அது சில ஆண்டுகளில் பேசிய அளவில் உங்களுக்கு லாபம் தரும்.
குழந்தை பிறந்த நாள் முதல் ஒவ்வொரு மாதமும் அவருக்காக நீங்கள் 5000 ரூபாய் ஒதுக்க முடியும் என்றால், நிச்சயம் 20 ஆண்டுகளில் உங்களால் அவருக்காக 50,000,00 வரை எளிதாக ஒரு நிதியை உருவாக்க முடியும். கேட்க ஆச்சர்யமாக உள்ளதா, வாருங்கள் எப்படி என்று பார்க்கலாம்.
SIP என்றால் என்ன?
SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம், இது இப்பொது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது எனலாம். இதன் மூலம் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். இருப்பினும், சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நிலையான வட்டி விகிதங்களை உறுதிப்படுத்த முடியாது என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.
ரூ.2,000 நோட்டை இந்த தேதிக்குள் மாற்றுங்க.. இல்லைனா அவ்ளோதான் - முழு விபரம் இதோ
ஆனால் SIP என்பது சந்தையில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதை விட குறைவான ஆபத்துகள் கொண்டதாகவே கருதப்படுகிறது. நீண்ட காலத்திற்கு சேமிப்பை செய்வதால், SIP ஆனது, கூட்டு வட்டியின் பலனைப் பெறுகின்றது. பொதுவாக, SIPல் சராசரியாக 12 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும், அதுவே சந்தை நிலை உங்களுக்கு சாதகமாக இருந்தால் இன்னும் சிறப்பான வட்டி விகிதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
5,000 ரூபாய் மாதாந்திர SIP ஐ ஆரம்பித்து 20 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ. 12,00,000 ஆக இருக்கும், ஆனால் 12 சதவீதத்தின்படி, இந்த முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ரூ.37,95,740 வரை வட்டி கிடைக்கும். இந்த வழியில், 20 ஆண்டுகளில், முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டி உட்பட, உங்களுக்கு மொத்தம் ரூ.49,95,740 அதாவது சுமார் 50 லட்சம் வரை கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மறுபுறம், நீங்கள் இந்த முதலீட்டை இன்னும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், உங்களுக்கு ரூ.94,88,175 கிடைக்கும். எந்த திட்டத்திலும் நீங்கள் பெற முடியாத தொகையாக இது இருக்கும். ஆகவே SIP என்பது உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை பாதுகாக்க ஒரு சிறந்த திட்டமாகும்.
அரசு ஊழியர்களுக்கு புதிய விதி.. மத்திய அரசு விதித்த வருமான வரி விதிப்பு முறை - முழு விபரம் உள்ளே !!
குறிப்பு : மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆகவே முதலீடு செய்யும் முன், துறை சார்ந்த நிபுணர்களை அணுகுவது சிறந்தது