இந்திய யூனிகார்னுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
பொதுவாக, CEO பதவி ஒரு ஆணால் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பொதுவான தவறான எண்ணங்களை உடைத்து, அம்பிகா சுப்ரமணியன் இளம் பெண்களுக்கு சரியான உதாரணமாக திகழ்ந்து வருகிறார். 8,200 கோடி மதிப்பிலான ஸ்டார்ட்அப் நிறுவனமான இந்திய யூனிகார்ன் நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி அம்பிகா சுப்ரமணியன் ஆவார்.
சுப்பிரமணியன் தரவு பகுப்பாய்வு அதாவது, டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான மு சிக்மாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் 2017 ஆம் ஆண்டு ஹுருன் இந்தியா பணக்காரர்களின் பட்டியல்படி, இந்தியாவின் எட்டு பணக்கார பெண்களில் இளைய பெண்மணியாக இடம்பிடித்துள்ளார்.
அம்பிகா சுப்ரமணியனின் முன்னாள் கணவர் தீரஜ் ராஜாராம் 2004 இல் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்களின் விவாகரத்துக்குப் பிறகு, சுப்ரமணியன் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை ராஜாராமுக்கு விற்றார். அவரை நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பங்குதாரராக மாற்றினார்.
அம்பிகா சுப்ரமணியன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பைத் தொடர்ந்தார். மிச்சிகனில் உள்ள வெய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் எம்எஸ் படித்தார்.
அவரது LinkedIn-ன்படி, அம்பிகா சுப்ரமணியன் 2007 இல் டேலண்ட் மேனேஜ்மேண்ட் தொடங்கினார், 2010 இல் நிறுவனத்தின் திறமை மேலாண்மைத் தலைவராக ஆனார். 2012 இல், அவர் தலைமை இயக்க அதிகாரியாகப் பொறுப்பேற்றார், அதன் பிறகு அவர் ஜனவரி 2016 வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Fact Check : "ஏ தள்ளு தள்ளு தள்ளு" நடுவழியில் ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ உண்மையா.?