சர்வதேச தரவரிசையில் சென்னை கல்லூரி முதலிடம்! #Bharath_Institute

By Asianet TamilFirst Published Jun 7, 2021, 2:26 PM IST
Highlights

சென்னையைச் சேர்ந்த பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (BIHER), 2021ம் ஆண்டுக்கான சிமேகோ நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் நாட்டிலேயே முதலிடம் பிடிக்கும் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது!
 

கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான சர்வதேச தரவரிசை நிறுவனமாக விளங்குகிறது 'சிமேகோ இன்ஸ்டிடியூஷன்ஸ் ரேங்கிங்ஸ்' (Scimago Institutions Rankings). உலகளவில் மேன்மையானதாகவும் துல்லியமானதாகவும் இந்தத் தரவரிசை கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச தரவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த வருடம் சென்னையைச் சேர்ந்த பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (BIHER), 2021ம் ஆண்டுக்கான சிமேகோ நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் நாட்டிலேயே முதலிடம் பிடிக்கும் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது!

நான்கு பிரிவுகளில் முதலிடம்!

தேசிய அளவில், பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், இயற்பியல் & வானியல் ஆகிய 4 பிரிவுகளில் பாரத் இன்ஸ்டிடியூட் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பெறும் கல்வி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது பாரத்! ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கும் இந்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெறுவது மட்டுமல்லாது, உலகளவில் 300 முதன்மையான பல்கலைக்கழகங்களுள் இந்தியாவைச் சேர்ந்த ஒரே தனியார் பல்கலைக்கழகமாக விளங்குவது பாரத் இன்ஸ்டிடியூட் மட்டுமே!

ஆராய்ச்சிக்கு முன்னுரிமை...

பல்வேறு துறைகளில் 100 ஆராய்ச்சி செயல்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ. 1 கோடியை BIHER சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது. 25,753 ஆய்வுக் கட்டுரைகள், 53000 சைட்டேஷன்ஸ் மற்றும் 476 உரிமங்கள் ஆகியவற்றை வெளியிட்டு நாட்டில் 7 வது இடத்தை BIHER கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலுமிருந்து வரும் 10,000 மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உயர்தரக் கல்வியை வழங்கிவரும் BIHER, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், 1.3 கோடி சதுரஅடி பரப்பில் கட்டடங்களைக் கொண்டிருக்கும் ஆறு கல்வி வளாகங்களில் இயங்கி வருகிறது.

நீங்க ஏன் பாரத் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கணும்?

* சுலபமான போக்குவரத்து வசதி
* நீங்கள் விரும்பிய கோர்ஸைத் தேர்ந்தெடுக்கலாம் (இன்ஜினியரிங்கில் மட்டும் 15 கோர்ஸ்கள் உள்ளன)
* அனைத்து பிரிவு/சமூக/நாட்டு மாணவர்களுக்கும் ஏற்ற பாதுகாப்பான கேம்பஸ்.
* சம்மர் இன்டர்ன்ஷிப், செமினார், இண்டஸ்ட்ரியல் விசிட் மாணவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன.
* வருடா வருடம் 2000+ மாணவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை கிடைக்கின்றது.
* மாணவர்களுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* உலகத்தரம் வாய்ந்த லேப்ஸ், வர்க்ஷாப்ஸ்
* அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்

2021 அட்மிஷன்ஸ் ஆரம்பம்...

மாணவர்களின் உயர்கல்விக் கனவுக்கு உத்தரவாதம் அளிக்கும் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தற்போது 2021 - 2022-க்கான மாணவர் சேர்க்கையைத் துவக்கியுள்ளது. பாரத் வழங்கும் உயர்கல்விப் பிரிவுகள்:

- பி.டெக்
- பி. ஆர்க்
- எம்.டெக்/எம்.ஆர்க்
- எம்.பி.ஏ / எம்.சி.ஏ
- ஆர்ட்ஸ் & சயின்ஸ் (யு.ஜி & பி.ஜி)
- பி.எஸ்.சி அக்ரி  
- சட்டம்
- பார்மஸி

இதுமட்டுமல்லாது IBM மற்றும் IOA  போன்ற உயரிய தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு புதுமையான பொறியியல் சார் படிப்புகளை பாரத் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வருங்காலத்துக்கு எது தேவையோ, எந்தத் துறையில் அதிக வாய்ப்புகள் இருக்குமோ, அதில் மாணவர்களால் மிளிர முடியும்!

பாரத் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து பயில வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்க, இந்த லிங்கிற்குச் செல்லவும்: https://www.bharathuniv.ac.in/admission2021/application/

click me!