உஷார் மக்களே... மீண்டும் ஒரு வார காலம் முடங்கும் வங்கிகள் சேவை..!

Published : Mar 26, 2021, 10:31 AM IST
உஷார் மக்களே... மீண்டும் ஒரு வார காலம் முடங்கும் வங்கிகள் சேவை..!

சுருக்கம்

இப்படி அடுத்த வாரம் முழுவதும் வங்கி சேவை தொடர்ச்சியாக இல்லாத காரணத்தால் மக்களுக்கு சிக்கல் ஏற்படும்.

வங்கிகள் சேவை நாளை முதல் ஏப்ரல் 2 ம் தேதி வரை இயங்காது என்பதால் பணப்பரிவர்த்தனையில் பொதுமக்கள் பிரச்சனையை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் வங்கிகள் சேவை 4 நாட்கள் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பண பரிவர்த்தனை பாதிப்புக்கள் எல்லாம் தற்போது தான் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு வாரம் வங்கிகள் சேவை பொது மக்களுக்கு இருக்காது என கூறப்படுகிறது. நாளை நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள். இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை ஹோலி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் செவ்வாய் கிழமை வேலை நாளாக உள்ளது. 

ஆனால் அதற்கு அடுத்த மார்ச் 31 ம் தேதி நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை இருக்காது. அதற்கடுத்த நாள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அன்றும் சேவை இருக்காது. மேலும் ஏப்ரல் 2 ம் தேதி புனித வெள்ளி விடுமுறை என்பதால் அன்றும் வங்கி சேவைக்கு விடுமுறை. அடுத்து ஏப்ரல் 3 சனிக்கிழமை வங்கி சேவை இருக்கும். ஆனால் அதற்கடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் விடுமுறையாகும். 
இப்படி அடுத்த வாரம் முழுவதும் வங்கி சேவை தொடர்ச்சியாக இல்லாத காரணத்தால் மக்களுக்கு சிக்கல் ஏற்படும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Pakistan Train: பாகிஸ்தான் ரயிலில் டிக்கெட் இல்லாமல் போனால் எவ்வளவு ஃபைன் தெரியுமா?
8th Pay Commission: 8வது சம்பள கமிஷன் முன் ஆசிரியர்கள் வைத்த புதிய கோரிக்கைகள்! முழு விவரம்