பதவிக் காலம் முடிய இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் ஆளும் அரசு வோட் ஆன் அக்கவுண்ட் தாக்கல் செய்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கான நிதியைப் பெறும்.
மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்டெஜட் வரும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் வோட் ஆன் அக்கவுண்ட் (Vote on Account) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் நிதித் தேவைக்கான தற்காலிக செலவுகளுக்கு தீர்வுகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோட் ஆன் அக்கவுண்ட் எனப்படும் இடைக்கால பட்ஜெட், வரிகள் மற்றும் இதர வருவாய்கள் வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் தொகுப்பு நிதியை பயன்படுத்துவதற்கு அத்தியாவசியமானது. அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்பதால், புதிய ஆட்சி அமையும் வரை மத்திய அரசு கஜானாவில் உள்ள நிதியைக் கையாள சட்டப் பிரிவு 116 அனுமதிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் பொதுத் தேர்தல் நடக்கும் நடப்பதை முன்னிட்டு முழு பட்ஜெட்டுக்குப் பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. முழுமையான பட்ஜெட் பிறகு மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரிப்பு!
2024ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும். எனவே, தற்போதைய அரசு தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் இரண்டு மாதங்களுக்கு மட்டும் செல்லும். நாடாளுமன்ற அனுமதியுடன் வோட் ஆன் அக்கவுண்ட் எனப்படும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
சட்டப்பிரிவு 266இன் படி, வரி வருவாய், கடன்கள் மீதான வட்டி மற்றும் மாநில அரசு வரி பங்களிப்பு ஆகியவற்றை மத்திய அரசு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த முடியாது. பதவிக் காலம் முடிய இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் ஆளும் அரசு வோட் ஆன் அக்கவுண்ட் தாக்கல் செய்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கான நிதியைப் பெறும்.
தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரை இந்த இடைக்கால பட்ஜெட் நடைமுறையில் இருக்கும். எனவே இந்த இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகளை விதிக்க முடியாது. அடிப்படை செலவுகளுக்கான நிதியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு விவரம் இதோ..