bsnl mtnl: பிஎஸ்என்எஸ்-எம்டிஎன்எல் இணைப்பு ஒத்திவைப்பு: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Apr 7, 2022, 12:41 PM IST
Highlights

bsnl mtnl: மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடட் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது

மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடட் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது

மகாநகர் நிகம் லிமிடட் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டதாகவும், இந்த இணைப்பு ஏப்ரல் மாதத்துக்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பி.கே.புர்வார்கூட வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

நிதி நெருக்கடி

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு துறை இணைஅமைச்சர் தேவ்சின் சவுகான் மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் அவர் கூறுகையில் “ மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடட் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டம் இருந்தது, இது குறித்து மத்திய அரசும் ஆலோசித்து வந்தது. 

2019ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இரு நிறுவனங்களை இணைக்க கொள்கைரீதியாக ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஆனால், நிதிப் பிரச்சினைகாரணமாக, அந்த திட்டத்தை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

கடன் 

பிஎஸ்என்எல் தலைவர், மேலாண் இயக்குநர் பிகே புர்வார் சமீபத்தில் நாடாளுமன்ற குழுவிடம் தாக்கல் செய்த அறிக்கையில், எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.26,500 கோடி கடன் இருக்கிறது அதை தீர்க்க சிறப்பு வழிகளைத் தேட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டு இரு நிறுவனங்களுக்கும் சேர்த்து ரூ.70ஆயிரம் கோடி மறுசீரமைப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியுதவியால், 2020-21ம் ஆண்டு எம்டிஎன்எல் நிறுவனம் லாபம் ஈட்டும், பிஎஸ்என்எல் நிறுவனம் 2023-24ம் ஆண்டு லாபமீட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடவுள் நேரில் வர வேண்டும்

எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி கடன் எப்படி வந்தது என்று கடவுள் பூமிக்கு வந்து தெரிந்தால்தான் அனைவரும் அறிய முடியும். அதுவரை நிறுவனம் மேம்படாது. இதுதான் உண்மை, இதை ஏற்க வேண்டும் என்று பிஎஸ்என்எல் தலைவர் புர்வார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
 

click me!