31 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த பிரிட்டிஷ் பவுண்ட்.....

 
Published : Oct 09, 2016, 03:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
31 ஆண்டுகளுக்கு  பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த பிரிட்டிஷ் பவுண்ட்.....

சுருக்கம்

நேற்றைய  வர்த்தகத்தில்,  ஆசிய பங்குச் சந்தையில் பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு மிகக் கடுமையாக சரிவடைந்தது.

அதாவது,  நேற்றைய வர்த்தகத்தில் 6 சதவீதம் வரை பவுண்ட் மதிப்பு  குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பங்குச் சந்தையில், நேற்று, ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 1.1819 ஆக சரிந்தது.

இதற்கு முன்னதாக, 1985-ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு தற்போது  தான் மிகப் பெரிய சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகத் தயாராவதால், அதனோடு உள்ள பேச்சுவார்த்தைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் தெரிவித்ததே , இந்த  சரிவிற்கு  காரணம்  என  தெரிகிறது.

அதே சமயத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகப் போவதாக அறிவித்ததிலிருந்தே பவுண்ட் மதிப்பு சரிவது  குறிப்பிடத்தக்கது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரிசர்வ் வங்கி செய்த ஒற்றை சம்பவம்.! மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு.!
Toll Update: ஊருக்கு போறீங்களா? இனி டோல்கேட்டில் நிற்கவே தேவையில்லை! பெட்ரோல், நேரம் எல்லாமே மிச்சம்.!