bricks gst rate: வீடுகட்டுவோருக்கு சிக்கல்! செங்கல் உற்பத்தி , விற்பனைக்கு 6 % ஜிஎஸ்டி வரி:ஐடியுடன் 12% வரி

Published : Apr 03, 2022, 11:25 AM IST
bricks gst rate: வீடுகட்டுவோருக்கு சிக்கல்! செங்கல் உற்பத்தி , விற்பனைக்கு 6 % ஜிஎஸ்டி வரி:ஐடியுடன் 12% வரி

சுருக்கம்

bricks gst rate : செங்கல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இன்புட் டேக்ஸ் கிரெடிட்(ஐடிசி) இல்லாமல் 6 சதவீதம் வரியும், ஐடியுடன் செலுத்துவதாக இருந்தால் 12 சதவீதம் வரி செலுத்தும் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

செங்கல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இன்புட் டேக்ஸ் கிரெடிட்(ஐடிசி) இல்லாமல் 6 சதவீதம் வரியும், ஐடியுடன் செலுத்துவதாக இருந்தால் 12 சதவீதம் வரி செலுத்தும் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

6 சதவீதம், அல்லது 12% வரி

இதற்கு முன் செங்கல் உற்பத்திக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி 6 சதவீதமாகவும், ஐடிசியுடன் 12சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
காம்போஷிசன் திட்டத்தில் செல்ல விரும்பாத  செங்கல் உற்பத்தியாளர்கள் ஐடிசியுடன் 12 சதவீதம் வரிவிதிப்பை பயன்படுத்தலாம். ஆனால், இதில் ஒரு வசதி என்னவென்றால் இன்புட் டேக்ஸ் கிரிரெடிட் எடுத்துக்கொள்ள முடியும். 6 சதவீதம் வரிவிதிப்பில் ஐடிசி வசதியைப் பெற முடியாது.

அனைத்து செங்கல்கள்

இந்த விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி செங்கல் உற்பத்தி, மேல்தளத்தில் பதிக்கும் ஓடுகள், சாம்பலில் தயாரி்க்கப்படும் செங்கல்கள், ஆஷ் பிளாக், நிலக்கரிச் சாம்பலில் தயாரிக்கப்படும் செங்கல் அனைத்துக்கும் காம்போஷிசன் திட்டம் பொருந்தும்.

இதுவரை செங்கல் உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்து. இன்புட் டேக்ஸ் கிரெடிட்டும்எடுக்க அனுமதிக்ககப்பட்டது. ஆனால், இனிமேல் 12 சதவீதம் விரிவிதிப்புக்குள் வந்தால் மட்டும்தான் ஐடிசி கோர முடியும். 

செங்கல்விற்பனை, தயாரிப்பு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவருவது குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்து, 2022,ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

பணவீக்கம், விலைவாசி உயரும்

ஏஎம்ஆர்ஜி அன்ட் அசோசியேட்ஸ் சீனியர் பார்ட்னர் ராஜத் மோகனஅ கூறுகையில்  “ இந்தியாவில் ஏற்கெனவே பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதில் வரிவிதிப்பை இப்போதுள்ள நிலையில் உயர்த்தினால், கட்டுமானங்களுக்குஅடிப்படையான செங்கல்விலை கடுமையாக அதிகரிக்கும்.  இதனால் கட்டுமானத்துறை மீண்டெழுவதும், வளர்ச்சியும் மோசமாக பாதிக்கும்.

ஐடிசி பெற்றுக்கொள்வதை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விரும்பமாட்டார்கள். காம்பவுண்ட் வரிவிதிப்புக்குள் செல்லும்போது 6சதவீதம் வரிசெலுத்த வேண்டும். இதனால், செங்கல்விலை கடுமையாக உயரும், அந்த செலவு வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தப்படும்” எனத் தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்