Breakout Stocks to Buy Today: மிஞ்சும் லாபத்தை அள்ளித் தரும் 5 பங்குகள்.! இனி பணத்திற்கு பஞ்சமே இருக்காது.!

Published : Dec 02, 2025, 08:54 AM IST
Share Market

சுருக்கம்

சந்தை மெதுவாக உயர்ந்து வரும் நிலையில், நிபுணர்கள் குறுகிய கால லாபத்திற்காக ஐந்து 'பிரேக் அவுட்' பங்குகளை பரிந்துரைத்துள்ளனர். Knowledge Marine, Cupid Ltd, Yatra Online உள்ளிட்ட பங்குகள் வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது. 

பங்கு சந்தை: இன்று வாங்க வேண்டிய 5 ‘பிரேக் அவுட்’ பங்குகள் 

இந்த வாரம் பங்கு சந்தை மெதுவாக உயர்வு நோக்கி நகரும் நிலையில், குறுகிய கால லாபத்துக்கு ஏற்ற ஐந்து முக்கிய “breakout” பங்குகளை தேர்வு செய்து லாபம் ஈட்டலாம். நிபுணர்கள் கூற்றுபடி, நிஃப்டி 50 குறியீடு 26,300 புள்ளிகளுக்கு மேல் நிலைத்தால், சந்தை 26,500 வரை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால், மொத்த சந்தையின் இயக்கத்தை விட தனிப்பட்ட பங்குகளின் வலிமையைப் பார்த்து முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Knowledge Marine & Engineering Works.

இந்த பங்கு ரூ.2,988 என்ற விலையில் வலுவான பிரேக் அவுட் கொடுத்து, குறுகிய காலத்தில் ₹3,200 வரை சென்று சேரும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான ஸ்டாப்லாஸ் ரூ.2,888. 

Cupid Ltd, இது ரூ.349 என்ற விலையில் வாங்கப்படலாம். இலக்கு ரூ.375 மற்றும் ஸ்டாப்லாஸ் ரூ.337. Garuda Construction & Engineering, கட்டுமான துறையில் நல்ல போக்கைக் காட்டி வருகிறது. ரூ.219க்கு வாங்கி ரூ.236 வரை லாபம் எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.211. 

ஆன்லைன் பயண சேவைகளில் முன்னிலை வகிக்கும் Yatra Online பங்கு ரூ.181.65 என்ற விலையில் வலுவான ஆதரவு நிலையைத் தாண்டியுள்ளது.ரூ.195 இலக்கு, ரூ.175 ஸ்டாப்லாஸ். இறுதியாக, வேளாண் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் செயல்படும் Gokul Agro Resources, ரூ.217 விலையில் உச்சத்தை நோக்கி நகர்கிறது. இலக்கு ரூ.233, ஸ்டாப்லாஸ் ரூ.210 என பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த ஐந்து பங்குகளும் தொழில்நுட்ப ரீதியாக வலுவான பிரேக் அவுட் மண்டலத்தில் இருப்பதால், குறுகிய கால வர்த்தகர்களுக்குப் பெரிய வாய்ப்பு என நிபுணர்கள் கருதுகின்றனர. இருப்பினும், பங்கு முதலீடு எப்போதும் அபாயத்தை கொண்டது. சந்தை நிலவரம் வேகமாக மாறக்கூடியதால், முதலீட்டாளர்கள் தங்கள் அபாயத்திறனை மதிப்பிட்டு, நிபுணர் ஆலோசனையுடன் மொத்த முதலீட்டு திட்டத்தை அமைத்து செயல்படுவது அவசியம்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!
Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!