ப்ளூ ஆதார் அப்டேட் இலவசம்.. குழந்தைகளுக்கான முக்கிய அறிவிப்பு..!

Published : Nov 18, 2025, 04:48 PM IST
blue aadhaar

சுருக்கம்

UIDAI, 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ப்ளூ (Baal) ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. பள்ளி சேர்க்கை மற்றும் அரசு நலத்திட்டங்களுக்கு இந்த அப்டேட் அவசியமாகும்.

UIDAI, குழந்தைகளின் ப்ளூ (Baal) ஆதார் அப்டேட் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது. BIT (Behavioural Insights Ltd) உடன் இணைந்த UIDAI, 5–17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் அப்டேட் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு எளிதில் புரியும் வகையில் மாறியுள்ளது.

குழந்தைகளின் ஆதார் அப்டேட் ஏன் அவசியம்?

குழந்தைகளின் ஆதார் பல சேவைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பள்ளி சேர்க்கை, அரசு நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, குழந்தைகள் நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதாரை அடிப்படையில் கொண்டவையே. வயது கூடுவதால், ப்ளூ ஆதாரில் இருந்து பயோமெட்ரிக் தகவல்கள் மாற்றமடைவது இயல்பு. 

பழைய தகவல்கள் இருந்தால் சரிபார்ப்பில் தடை ஏற்பட்டு சேவைகள் தாமதப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளின் கைரேகை, கருவிழி ஸ்கேன், புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது மிக அவசியம்.

எப்போது வரை இலவச அப்டேட்?

UIDAI, 7–15 வயது குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு 1 வருடத்திற்கு முழுமையான கட்டண தள்ளுபடி (இலவச MBU) வழங்கப்பட்டுள்ளது.

இலவச அப்டேட் காலம்

  • அக்டோபர் 1, 2025 → செப்டம்பர் 30, 2026.
  • இந்த ஒரு வருடத்தில் பெற்றோர்கள் எந்த கட்டணமும் இன்றி அப்டேட் செய்து கொள்ளலாம்.

குழந்தைகளின் ப்ளூ ஆதார் அப்டேட் செய்ய தேவையானவை

  • குழந்தையின் ப்ளூ ஆதார் அட்டை.
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார்.
  • குழந்தையை நேரில் அழைத்துச் செல்வது கட்டாயம்.
  • இவை அனைத்தையும் கொண்டு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் செல்ல வேண்டும்.

அப்டேட் செய்யும் முறைகள்

மையத்தில் குழந்தையின் புதிய கைரேகைகள், கருவிழி ஸ்கேன், மற்றும் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் பெற்றோருக்கு URN – Update Request Number வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி UIDAI இணையதளம் அல்லது mAadhaar ஆப்பில் அப்டேட் நிலையை எளிதாகப் பார்க்கலாம்.

அப்டேட் முடிந்த பின்

தகவல் புதுப்பிக்கப்பட்டவுடன், புதிய ஆதார் விவரங்கள் UIDAI போர்டல் அல்லது mAadhaar செயலி மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இது குழந்தைகளின் எதிர்கால கல்வி, நலத்திட்டங்கள், அடையாளச் சரிபார்ப்பு போன்ற பல செயல்களில் தடையில்லா அனுபவத்தை உறுதி செய்யும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!