
2022-23ம் நிதியாண்டிலிருந்து கிரிப்டோ கரன்சிகள் முதலீட்டுக்கு 30 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியா எனத் தெரியவில்லை, சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது.
கிரிப்டோ கரன்சி மதிப்புகுறைந்ததற்கு இந்திய அரசின் விரிவிதிப்பு முடிவு முழுமையான காரணமில்லை என்றாலும், அந்தக் காரணத்தையும் தவிர்க்க முடியாது. இருப்பினும் சந்தையில் உள்ள பரிமாற்றம்தான்முழுமையாகத் தீர்மானிக்கும் என்று பிட்காயின் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 24 மணிநேர்தில் கிரிப்டோ கரன்சிகளின் சந்தை மதிப்பு 4.04 சதவீதம் சிரந்து 1.70 லட்சம் கோடி டாலர் அளவாகச் சரிந்துவிட்டது. வர்த்தகமதிப்பு 7.54சதவீதம் உயர்ந்து, 68,720 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அடுத்த நிதியாண்டு முதல் கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம்ஈட்டப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கப்படும் என 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட் அறிவிப்புக்குப்பின் இந்தியாவில் பிட்காயின் வைத்திருப்பவர்களின் சொத்து மதிப்பு அடுத்த நிதியாண்டுமுதல் 30 சதவீதம் குறையக்கூடும் என்பதால், முதலீட்டாளர்கள் இடையே ஒருவிதமான பதற்றமான சூழல் நிலவியது. இதனால் பிட்காயினை கைமாற்றியதால் திடீர் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பிட்காயின் மதிப்பு 3.8 சதவீதம் சரிந்து, ரூ.29 லட்சத்து 57ஆயிரத்து 67 ஆகக் குறைந்துவிட்டது.
எதிரியத்தின் மதிப்பு 3.58 சதவீதம் வீழ்ச்சிஅடைந்து, ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 677ஆகக் சரிந்துவிட்டது.
கார்டனோ மதிப்பு 4.43 சதவீதம் சரிந்து ரூ.82.76 ஆகவும், அவலான்சே மதிப்பு 6.23 வீழ்ச்சி அடைந்து, ரூ.5,478 ஆகவும் குறைந்தது. போல்காடாட் மதிப்பு 8.88சதவீதம் சரிந்து, ரூ.1,469 ஆகவும், லிட்காயின் மதிப்பு 5.54 சதவீதம் கீழே இறங்கி, ரூ.8,610 ஆகவும் உள்ளது. டீத்தர் மதிப்பு மட்டும் 0.24 %உயர்ந்து, ரூ.79.94 ஆக இருக்கிறது.
மீம்காயின் ஷிப் 4.29 சதவீதம் இறங்கியது, டாகிகாயின் மதிப்பு 2.98 சதவீதமும், டெரா காயின் மதிப்பு 6.6 சதவீதம் வீழ்ந்து ரூ.3,860ஆக சரிந்தது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.