Russia Ukrain Crisis: ரஷ்யா-உக்ரைன் போர்: ஆட்டம் கண்ட கிரிப்டோகரன்சி மதிப்பு: 1.66 லட்சம் கோடி டாலர் காலி

By Pothy RajFirst Published Feb 24, 2022, 12:56 PM IST
Highlights

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தங்கம் உள்ளிட்டபொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஆனால், கிரிப்டோகரன்சி மதிப்பு மளமளவெனச் சரிந்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தங்கம் உள்ளிட்டபொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஆனால், கிரிப்டோகரன்சி மதிப்பு மளமளவெனச் சரிந்துள்ளது. 

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம் ஏற்பட்டதிலிருந்தே சர்வதேச சந்தையில் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எத்திரியம் மதிப்பு சரிந்துகொண்டே வந்தது. உச்சகட்டமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அதிபர் புதின் இன்று அறிவித்தபின் சர்வதேசந்தையில் கரிப்டோகரன்சி மதிப்பு வேகமாகச் சரிந்தது.

கிரிப்டோகரன்சிகளில் உலகளவில் பெருவாரியாக மதிக்கப்படும் பிட்காயின் மதிப்பு 10 சதவீதம் சரிந்து, 34,618 டாலராகச் சரிந்துள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின்படி, ரூ.26,04,592 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் ரூ.36 லட்சமாக இருந்தநிலையில் 20 நாட்களில் ரூ10 லட்சம் சரி்ந்துள்ளது.

2-வது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான எதிரியம் மதிப்பு 10 சதவீதம் குறைந்து, 2,376 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மற்றொரு பிரபலமான கிரிப்டோகரன்சியான டாட்ஜிகாயின் மதிப்பு 12 சதவீதமும், ஷிபா மதிப்பு 10 சதவீதமும், போல்காடாட் மதிப்பு 10 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பாலிகான் மதிப்பு 12 சதவீதமும், எஸ்ஆர்பி மதிப்பு 9 சதவீதமும், டெரா மதிப்பு ஒரு சதவீதமும் சரிந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் அதன்மதிப்பு ஒருலட்சத்து 66 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு அதாவது 7.9 சதவீதம் மதிப்புக் குறைந்துள்ளது. கடந்த வாரத்தின் இறுதியில் 40ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு மதிப்பு சரிந்தநிலையில், உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் காரணமாக 60 ஆயிரம் கோடிடாலர் சரிந்துள்ளது. 

முட்ரெக்ஸ் சந்தை கண்காணிப்பு நிறுவனத்தின் தலைமை நி்ர்வாக அதிகாரி இதுல் படேல் கூறுகையில்  “ கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச பிட்காயின் வர்த்தகம் 191 சதவீதம் சரிந்துள்ளு. பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட பல கிரிப்டோகரன்சிகள் மதிப்பு பாதாளத்துக்குச் சென்றுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் அறிவிப்புக்குப்பின் அனைத்தும் தலைகீழாகமாறிவிட்டது. அடுத்த சில வாரங்களுக்கு கிரிப்டோ சந்தையில் பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் இ்ந்தப் போர் ஏற்படுத்தும். கிரிப்டோகரன்சி சந்தையில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் நிதிசார்ந்த சந்தைகளிலும் பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் இந்த போர் ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்

click me!