BHIM பேமெண்ட்ஸ் செயலி வழங்கும் சில கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. குறிப்பாக டிஜிட்டல் பேமெண்ட் முறை அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களில் யுபிஐ பேமெண்ட் முறை உள்ளது. கூகுள் பே, போன் பே, BHIM யுபி போன்ற செயலிகளை பயன்படுத்தி பொதுமக்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால், பணம் செலுத்தும் போது கூடுதல் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் BHIM பேமெண்ட்ஸ் செயலி வழங்கும் சில கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த சலுகைகள் வரும் மார்ச் 31-ம் தேதி வரை தான் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. BHIM செயலில் பிளாட் ரூ 150 பிளஸ் ரூ 600 என இரண்டு கேஷ் பேக் சலுகைகள் வழங்குகிறது. எனவே இதன் மூலம் ரூ750 வரை கேஷ்பேக் பெறலாம்.
எப்படி இந்த கேஷ்பேக் சலுகைகளை பெறுவது?
ஹோட்டல் உணவு சாப்பிடும் போது அல்லது பயணம் செய்வதை விரும்புவோருக்கு, BHIM செயலியானது ரூ.150 பிளாட் கேஷ்பேக்கை வழங்குகிறது. அதாவது ஹோட்டலில் சாப்பிடும் போது அல்லது பயணம் மேற்கொள்ளும் போது ரூ. 100-க்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தாலும் ரூ.30 கேஷ்பேக்கைப் பெறலாம். மேலும் உணவகக் கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம், நீங்கள் ரூ.150 வரை கேஷ்பேக்காகப் பெறலாம். முழுத் தொகையையும் அன்லாக் செய்ய குறைந்தது ஐந்து முறையாவது இந்தச் சலுகையை பயன்படுத்த வேண்டும்.கூடுதலாக, ரூபே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் கார்டுகளை BHIM செயலியுடன் இணைத்து, ரூ.600 கேஷ்பேக் சலுகையை பெறலாம்.
இதில் தலா ரூ.100க்கு அதிகமாகும் முதல் மூன்று பரிவர்த்தனைகளுக்கு ரூ.100 கேஷ்பேக், கிடைக்கும். மேலும் அதன்பின் ஒவ்வொரு மாதமும் ரூ.200க்கு மேல் 10 பரிவர்த்தனைகளுக்கு ரூ.30 கேஷ்பேக் ஆகியவை கிடைக்கும். ரூ.600 கேஷ்பேக் வெகுமதியைப் பெற, இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..
இவை தவிர பீம் ஆப் உர்ஜா 1 சதவீத திட்டத்தையும் வழங்குகிறத. பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி என அனைத்து எரிபொருள் கட்டணங்களிலும் பயனர்களுக்கு 1 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.. மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு கட்டணங்கள் போன்ற பயன்பாட்டு பில் செலுத்துதல்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
பரிவர்த்தனை தொகை ரூ 100 அல்லது அதற்கு மேல் இருந்தால்.BHIM செயலியுடன் இணைக்கப்பட்ட உங்கள் முதன்மை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். BHIM செயலியில் இந்த கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள் மார்ச் 31, 2024 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.