LIC Shares Zoom : LICயின் பங்குகள் இன்று வியாழன் அன்று 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் அது பல சாதனைகளை புரிந்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) வெற்றியை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ராஜ்யசபா உரையில் வெளிப்படையாக எடுத்துரைத்த ஒரு நாளுக்குப் பிறகு, பிஎஸ்இயில் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் 9.5% உயர்ந்து ரூ.1,144 ஆக உயர்ந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஜாம்பவான்களை முறியடித்துள்ளது.
இந்நிலையில் இன்று பிப்ரவரி 8ம் தேதி வியாழக்கிழமை அன்று இந்தியாவின் நான்காவது பெரிய பங்குகளாக எல்ஐசியின் சந்தை மூலதனம் முதல் முறையாக ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டியது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இது மோடி அவர்களுடைய அந்த ராஜ்யசபா உரைக்கு அடுத்த நாள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் எல்ஐசி பங்குகளின் மதிப்பு இப்போது அதன் அடுத்த 3 பட்டியலிடப்பட்ட போட்டியாளர்களான ஹெச்டிஎஃப்சி லைஃப் (ரூ. 1.3 லட்சம் கோடி), எஸ்பிஐ லைஃப் (ரூ. 1.49 லட்சம் கோடி) மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் (ரூ. 76,000 கோடி) ஆகியவற்றை விட இரட்டிப்பாகும். இது ஒரு மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 31, 2023ல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான நிதி செயல்திறனை நிறுவனம் அறிவித்த பிறகு, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (ஜிஐசி-ரீ) பங்குகள் 12 சதவீதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.460.90 ஐ எட்டியது இதன் அளவு மொத்தம் 28,458.1 கோடி ஆகும். ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 3,854.82 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் (என்ஐஏசிஎல்) பங்குகள் 14 சதவீதம் உயர்ந்து புதிய சாதனையான ரூ.311.90ஐ எட்டியுள்ளது. கடந்த ஐந்து அமர்வுகளில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் உயர்ந்து, ஒரு கூர்மையான ஏற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் பங்கு 181 சதவீதம் பெரிதாகி, மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்! தொடர்ந்து 6வது முறையாக மாற்றம் இல்லை!