
பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆஃப் பரோடா வங்கி, அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.மார்ச் 15-ம் தேதி விண்ணப்பிக்கக் கடைசித் தேதியாகும்.
பேஃங்க் ஆஃப் பரோடா வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பேஃங்க் ஆஃப் பரோடா வங்கியில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் அதிகாரிகள் பணிக்கு சேர்க்கப்பட உள்ளன. இந்தப்பிரிவில் மொத்தம் 42 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 23ம் தேதி ஆன்-லைனில் வெளியிடப்பட்டுள்ளது, விண்ணப்பிக்கக் கடைசித் தேர்தி மார்ச் 15ம்தேதியாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் இணையதளம் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம்செய்வோர் தேர்வுக்கான கட்டணத்தைஆன்-லைனில்தான் செலுத்த வேண்டும்.
கல்வித் தகுதி
இ்ந்த அதிகாரிகள் பணிக்கு சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பு முடித்திருக்கவேண்டும் அல்லது எம்பிஏ அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் பிஜிடிஎம் , ஐசிடபிள்யுஏ, பிடெக், பிஇ, எம்டெக், எம்இ, பிஎஸ்சிஅல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்க த் தகுதி உடையவர்கள். இந்தப் படிப்புகளை கல்லூரியில் நேரடியாகச் சென்று படித்திருக்க வேண்டும். இந்தப் பிரிவில் ஓரளவு அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்தப் பணிக்கு விண்ணிப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் தரம்பிரிக்கப்பட்டு, நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வங்கிகள் நேர்காணலுக்கு அழைக்கும்போது விண்ணப்பம்செய்தவர்கள் உரிய சான்றிதழுடன் செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
பேங்க் ஆஃப் பரோடா வங்கி இணையதளத்தில் செல்ல வேண்டும்.ஹோம்பேஜில் கேரீர் ஆப்பர்சூனிட்டிஸ் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
அதில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் பிரிவு வரும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பணியிடத்தை நிரப்பி, கட்டணத்தை செலுத்தி சப்மிட் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன் அதில் நகலெடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.