வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வாரத்தில் 5 நாள் வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் மத்திய அரசு இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2022-ம் ஆண்டு நவம்பார் மாதம் முதல் முன் தேதியிட்டு இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி ஊழியர்களின் வாரத்தின் 5 நாள் வேலை என்ற மற்றொரு கோரிக்கையையும் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அங்கீகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், திருத்தப்பட்ட வேலை நேரம் அரசின் அறிவிப்பிற்குப் பிறகு அமலுக்கு வரும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று முன் தினம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 % உயர்த்தப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50% ஆக உயர்ந்துள்ளது.
Google Pay, PhonePe, Paytmஐப் பயன்படுத்துகிறீர்களா? அப்ப இந்த பாதுகாப்பு டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..
இந்த சூழலில் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளதால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் பாஜக அரசின் தேர்தல் நவடிக்கையாக இது இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.