
பஜாஜ் மோட்டார்சைக்கிஸ் தனது டாப் லைன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. 220F மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் N250, பல்சர் F250 போன்ற மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றன.
விலை உயர்வை அடுத்து பல்சர் 220F விலை ரூ. 660 அதிகரித்து தற்போது ரூ. 1.34 லட்சம் என மாறி இருக்கிறது. பல்சர் F250 சீரிஸ் விலை ரூ. 915 மற்றும் பல்சர் N250 விலை ரூ. 1180 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய பல்சர் F250 விலை ரூ. 1.41 லட்சம் என்றும் பல்சர் N250 விலை ரூ. 1.39 லட்சம் என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பூனேவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை அவ்வப்போது உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. முதலில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்து பின் சத்தமின்றி அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.
புதிய பல்சர் N250 மற்றும் பல்சர் F250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இரு மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், சைடு-ஸ்லிங் டூயல் பாரெல் எக்சாஸ்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா FZ250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. பல்சர் F250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 SF மற்றும் யமஹா ஃபேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.