itr filing date: வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு காலக் கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பதில்

By Pothy Raj  |  First Published Jul 22, 2022, 5:48 PM IST

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு வரும் 31ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய வருவாய்துறை செயலாளர் பதில் அளித்துள்ளார்.


வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு வரும் 31ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய வருவாய்துறை செயலாளர் பதில் அளித்துள்ளார்.

வருமானவரி செலுத்துவோர் கடந்த ஆண்டுக்கான வருமானவரி ரி்ட்டன் தாக்கல் செய்யக் கடைசித் தேதி வரும் 31ம்தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் காலக்கெடு தேதி வந்ததும், நீட்டிப்பு செய்யப்படும். இந்த ஆண்டும் அதுபோன்று நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

Tap to resize

Latest Videos

முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

மத்திய வருவாய்துறை செயலாளர் தருண் பஜாஜ் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:

ஜூலை 20ம்தேதி வரை 2021-22ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்கள் 2.30 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே இருப்தால், இனிவரும் நாட்களில் ரிட்டன் தாக்கல் செய்வோர் எண்ணிக்கைஅதிகரிக்கும்.

கடந்த2020-21நிதியாண்டில் 5.89 கோடிபேர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தநர். அப்போது கொரோனா காரணமாக டிசம்பர் 31ம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

ஐடி ரிட்டன் செய்வோர் கவனத்துக்கு! தவிர்க்க வேண்டிய தவறுகள்: கவனிக்க வேண்டிய அம்சங்கள்

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுவதால்  இந்த ஆண்டும் நீட்டிக்கப்படும் என மக்கள் நினைக்கிறார்கள். ரிட்டன் தாக்கல் செய்வது மெதுவாக நடக்கிறது, தினசரி 15 லட்சம் முதல் 18லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்கிறார்கள்.  இது படிப்படியாக வரும் நாட்களில் 25 முதல் 30 லட்சமாக அதிகரிக்கும். 

கடைசி நேரத்தில் ரிட்டன் தாக்கல் செய்பவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கடைசி நாளில் மட்டும் 10 சதவீதம் பேர் ரிட்டன் தாக்கல் செய்தனர். 50 லட்சம் பேர் பைலிங் செய்தனர். இந்த ஆண்டு ஒரு கோடியைக்கூட எட்டலாம்.

itr filing date: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி? 12 எளிய வழிமுறைகள்

இந்த ஆண்டுவருமானவரி ரி்ட்டன் தாக்கல் செய்வோருக்கு அளிக்கும் தெளிவான செய்தி என்னவென்றால், ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிக்கப்படாது. ரிட்டன் பைல் செய்தவர்களிடம் இருந்து நாங்கள் கேட்டவரை தாக்கல் செய்வது எளிதாக இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

இவ்வாறு தருண் பஜாஜ் தெரிவித்தார்

click me!