ரிச்சர்ட் மில்லேயின் மிகவும் அபூர்வமான இந்தக் வாட்ச் இதுவரை 18 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை ஆனந்த் அம்பானி அணிந்திருப்பது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரிலையன்ஸ் குழும தலைவரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சன்ட்டுடன் வருகிற 12ஆம் தேதி மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.
14ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருமண விழாவுக்கு முன், ஆனந்த் அம்பானி ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நெரல் பகுதியில் உள்ள கிருஷ்ணகாளி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அங்கு அவர் ஹவானி விழா நடத்தி திருமணத்திற்கு கடவுளின் ஆசியைப் பெற்றார். இந்நிலையில், கோயிலுக்குச் சென்றபோது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த வாட்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
7,581 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன: ஆர்.பி.ஐ. தகவல்
ஆனந்த் அம்பானி ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரத்தை அணிந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த வாட்ச் விலை ரூ.6.91 கோடி. இதேபோல பிரபலமான பிராண்டுகளின் விலை உயர்ந்த் வாட்ச்கள் பல ஆனந்த் அம்பானியிடம் உள்ளன.
ரிச்சர்ட் மில்லேயின் மிகவும் அபூர்வமான இந்தக் வாட்ச் இதுவரை 18 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை ஆனந்த் அம்பானி அணிந்திருப்பது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் குஜராத் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்றபோதும், ஆனந்த் அம்பானி ரூ.18 கோடி மதிப்புள்ள வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார்.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆனந்த் அம்பானியின் வாட்ச்சை வியந்து பார்த்தார்கள். அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலானது.
செல்வமகள் திட்டம் உள்பட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அறிவிப்பு! எவ்ளோ தெரியுமா?