களைகட்டிய அம்பானி வீட்டு திருமணம்.. குஜராத்திற்கு படையெடுத்த பாலிவுட், சர்வதேச பிரபலங்கள்..

By Ramya s  |  First Published Mar 2, 2024, 9:32 AM IST

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தின் ஜாம்நகரில் நேற்று தொடங்கின.


ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தின் ஜாம்நகரில் நேற்று தொடங்கின. பாடகி ரிஹானா, நடிகர்கள் ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராணி முகர்ஜி, ராம் சரண், அட்லீ, தோனி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான், இவான்கா ட்ரம்ப், உட்பட மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், பிரபல தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 2,000 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பூட்டானின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் மனைவி ஜெட்சன் பெமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

A night to remember: Anant Ambani & Radhika merchant pre-wedding bash in Jamnagar Gujarat India..!! 🇮🇳♥️ | | Rihanna | pic.twitter.com/U9Co4VBfvZ

— Radhika Chaudhary (@Radhika8057)

 

பாடகர்கள் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் தோசன்ஜ், பாடகி ரிஹானா ஆகியோர் கொண்டாட்டத்தின் போது கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, சவுதி அராம்கோ தலைவர் யாசிர் அல் ருமையன், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி சிஇஓ மற்றும் எம்டி சுல்தான் அல் ஜாபர், வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் இகர், பிளாக்ராக் சேர்மன் மற்றும் சிஇஓ லாரி ஃபிங்க், அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் கிளாஸ்னர் உள்ளிட்ட ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி திருமணம்.. நீதா அம்பானியின் முக்கியமான 2 ஆசைகள் இதுதானாம்..

முதல் நாள் விழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று ரிஹானா பாலிவுட் பாடல்களை பாடினார். இதுதொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. பச்சை நிற உடையில் இருந்த ரிஹானா பாடுவதை அதில் பார்க்க முடிகிறது. முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் இஷா அம்பானி உட்பட அம்பானி குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் ரிஹானா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Exclusive 🚨 Rihanna Performance in Bollywood songs 😉 pic.twitter.com/gSKOO2UrdA

— sarcastic (@Sarcastic_broo)

 

இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வின் போது நடந்த கலை நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி - ராதிகா இருவரும் நடனமாடும் வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பின்னணியில் நடனமாடுவதையும் அதில் பார்க்க முடிகிறது.

Bollywood star as a background dancer at Ambani's wedding : pic.twitter.com/Fovc6Tws4X

— Nishi 🌝 (@Nishi_45)

 

இந்த ப்ரீ வெட்டிங் விழாவின் இரண்டாவது நாள் இயற்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டது. ஜாம்நகரில் உள்ள அம்பானி குடும்பத்தின் புதிய வனவிலங்கு மீட்பு மையத்தை விருந்தினர்கள் பார்வையிட உள்ளனர். இன்று மாலை இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் துடிப்பான காட்சியான ‘மேளா ரூஜ்’ என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது..

click me!