akasa air: akasa air share: ஹூன்ஹூன்வாலாவின் ‘ஆகாஸா ஏர்’ விமானம் டேக்ஆஃப் தொடங்குது! டிஜிசிஏ ஒப்புதல்

By Pothy RajFirst Published Jul 8, 2022, 12:50 PM IST
Highlights

கோடீஸ்வர முதலீட்டாளர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாஸா ஏர் விமான நிறுவனத்துக்கு சேவையைத் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கோடீஸ்வர முதலீட்டாளர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாஸா ஏர் விமான நிறுவனத்துக்கு சேவையைத் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

சித்ராவுக்கு சோதனைக்கு மேல் சோதனை! சிக்கினார் சஞ்சய்: சிபிஐ புதிய வழக்கு:

இதையடுத்து, இந்த மாத இறுதியில் ஆகாஸா ஏர் தனது முதல் பயணிகள் விமான சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோபர்ஸ்ட், ஏர்ஏசியாஇ்ந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பட்ஜெட் விமானநிறுவனங்கள் ஏற்கெனவே சேவையில் இருக்கும் போது 6வதாக தற்போது ஆகாஸா ஏர் நிறுவனம் சேர்ந்துள்ளது.

விவோவின் மெகா மோசடி! ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு திருப்பியது அம்பலம்:அமலாக்கப்பிரிவு பகீர்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது  பயணிகல் சேவையைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது. ஆனால், இதுவரை அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து புதிய விமானங்களை ஆர்டர் செய்யவில்லை.

ஆகாஸா ஏர் விமானநிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்த, குறைந்த எரிபொருளில் பறக்கக்கூடிய எஞ்சின்கள் கொண்ட போயிங் 737 மேக்ஸ் விமானம் கடந்த மாதம் 21ம் தேதி வந்து சேர்ந்தது. முதல் கட்டமாக மெட்ரோ நகரங்களையும், 2ம் தர மற்றும் 3ம் தர நகரங்களை இணைக்கும் வகையில் விமான சேவை இருக்கும். 2023ம் ஆண்டுக்குள் 18 விமானங்களை வாங்கவும் ஆகாஸா ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆகாஸா ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனர் வினய் துபே கூறுகையில் “ எங்களின் வர்த்தகரீதியிலான விமான சேவையை ஜூலை இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் ஏற்ற, குறைந்தவிலையுள்ள, சூழலுக்கு மாசில்லாத விமான சேவையை நாங்கள் தருவோம்” எனத் தெரிவித்தார்.

தங்கம் விலை 2 நாட்களுக்குப்பின் உயர்வு: சவரன் ரூ.37ஆயிரத்தில் ஊசலாட்டம்: இன்றைய நிலவரம் என்ன?

அமெரிக்காவின் போர்ட்லாந்தின் போயிங் நிறுவனத்திடம் எரிபொருளை சேமிக்கக் கூடிய பிரத்யேக போயிங் விமானத்தை தயாரிக்கக் கோரி ஆகாஸா விமான நிறுவனம் ஆர்டர் அளித்திருந்தது. அதில் முதல் விமானம் கடந்த மாதம் 21ம் தேதி டெல்லி இந்திரா காந்தி விமானநிலையம் வந்து சேர்ந்தது.

2023ம் ஆண்டுக்குள் 18 போயிங் விமானங்களை ஆகாஸா நிறுவனம் வாங்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 72 விமானங்களை வாங்கவும் ஆகாஸா ஏர் திட்டமிட்டுள்ளது

72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் அனைத்தும், எரிபொருளை மிச்சப்படுத்தி பறக்கும் சிஎப்எம் லீப் பி ரக எஞ்சனால் வடிவமைக்கப்பட்டவை.
 
 

click me!