நீங்கள்தான் வள்ளல்! ரூ.45ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்கிய எலான் மஸ்க்: எதற்கு தெரியுமா?

By Pothy RajFirst Published Feb 16, 2022, 12:28 PM IST
Highlights

உலகில் பசியால், பட்டினியால்வாடுவோருக்கு உதவுவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் 50.44 லட்சம் பங்குகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தானமாக வழங்கியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் பசியால், பட்டினியால்வாடுவோருக்கு உதவுவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் 50.44 லட்சம் பங்குகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தானமாக வழங்கியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பங்குவர்த்தக மையம் இந்த செய்தியை உறுதி செய்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மதிப்பின்படி டெஸ்லா நிறுவனத்தின் 50.44 லட்சம் பங்குகளின் மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடிக்கும்அதிகம். இப்போது அதன் மதிப்பு ரூ.45ஆயிரம் கோடிக்கும் அதிகம் எனத் தெரிகிறது.

இந்த பங்குகளை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதியிலிருந்து 29ம் தேதிக்குள் எலான் மஸ்க் மாற்றியுள்ளதாக அமெரிக்க பங்கு வர்த்தக மையம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுப் பாதுகாப்பு(WFP) அமைப்பின் தலைவர் டேவிட் பீஸ்லி சிஎன்என் சேனலுக்குஅளித்த பேட்டி ஒன்றில் “உலகில்உள்ள கோடீஸ்வரர்கள் அதாவது டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸ், பில்கேட்ஸ் ஆகியோர் தங்கள் 660 கோடி டாலர்களை நன்கொடையாக வழங்கினால் உலகில் 4.20 கோடி மக்கள் பட்னியால் உயிரிழப்பதைத் தடுக்க முடியும், அவர்களுக்கு உணவு வழங்கிட முடியும்” எனத் தெரிவித்திருந்தார்

இதற்கு அப்போது ட்விட்டரில் கேள்வி எழுப்பிய எலான் மஸ்க் “ 600 கோடிக்கும் அதிகமான டாலர்கள் எவ்வாறு உலக மக்களின் பட்டினியைப் போக்கும் என்று உலக உணவு அமைப்பு எனக்கு விளக்கினால், நான் டெஸ்லா பங்குகளை விற்கத் தயார். அப்போதுதான் இந்தப் பணம் எவ்வாறு செலவிடப்டுகிறது என்பது மக்களுக்கு புரியும். ” எனத் தெரிவித்திருந்தார்

இதற்கிடையே உலக உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு பில்கேட்ஸ்மெலின்ட் கேட்ஸ் அமைப்பு 1.50 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதற்கு அடுத்தார்போல் நன்கொடை வழங்கியது எலான் மஸ்க் என்று கிராக்னிக்கல் ஆஃப் பிலான்த்ரபி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் தெரிவித்துள்ளது.

click me!