
ஆசியாவிலேயே உணவுத்துறையில் வெளியிடப்பட்ட ஐபிஓக்களில் சிறப்பாகச் செயல்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி வில்மர் நிறுவனம் இருக்கிறது.
எந்த நிறுவனமும் இல்லை
பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டதிலிருந்து அதானி வில்மர் நிறுவனம் மூலம் 135 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. ஆசியப் பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்ட ஒரு பங்கு இந்த அளவு லாபம் காட்டியதில்லை.அதானி வில்மர் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் தடம்பதித்திலிருந்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், புதிதாக ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்கள் சந்தையின் கடைக்கோடியில் உள்ளன.
2022ம் ஆண்டில் ஆசியப் பங்குச்சந்தையில் இதுவரை 121 நிறுவனங்கள் ஐபிஓக்களை வெளஇயிட்டுள்ளன, இவற்றின் மதிப்பு மட்டும் 100 மில்லியன் டாலர்களாகும். ஆனால் இதில் அதானி வில்மர் நிறுவனம்தான் சிறப்பாகச்செயல்பட்டுள்ளது.
கூட்டு நிறுவனம்
அதானி நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் இன்டர்நேஷனல், மானிடரி அதாரிட்டி ஆஃப் சிங்கப்பூர் நிப்பான் லைஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதானி வில்மர் நிறுவனத்தில் அதிகமாக முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து வரும் போரால் வட்டிவீத உயர்வால் ஐபிஓ வெளியிட்ட மூன்றில் இருபங்கு நிறுவனங்கள் சந்தையிலிருந்து காணாமல் போய்விட்டன. ஆனால், அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மட்டும் 200 மடங்கு உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்கள்
அதானி வில்மர் சார்பில் ஃபார்ச்சூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வகை உணவுப் பொருட்கள் தயாராகி வருகின்றன. இந்த நிறுவனத்தின் சார்பில் இதுவரை 48.60 கோடி டாலர்கள்வரை நிறுவனத்தை விரிவுபடுத்தவும், கடனை திருப்பிச் செலுத்தவும், பிறநிறுவனங்களை கையகப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதானி வில்மர் நிறுவனம் மட்டுமல்லாது அதானி தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 200 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன, அதானி க்ரீன் எனர்ஜி ஆண்டின் சிறப்பாகச் செயல்பட்ட 5-வது நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே 6-வது கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 3000 கோடி டாலர் 2022ம் ஆண்டில் மட்டும் அதிகரித்துள்ளது. அதானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 10600 கோடி டாலராகும்.
விலைவாங்கிய நிறுவனங்கள்
ப்ளூம்பெர்க் செய்தியின்படி கடந்த ஆண்டு மட்டும் 32 நிறுவனங்களை அதானி நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது, இதற்காக 1700 கோடி டாலர் செலவிட்டுள்ளது. நிலக்கரி, எரிபொருள், கட்டுமானம், சிமெண்ட், உணவுப் பொருட்கள், மின்சக்தி, க்ரீன் எனர்ஜி என பல்வேறு துறைகளில் அதானி நிறுவனம் கோலோச்சி வருகிறது.
மதிப்பு சரிவு
ஆனால் கடந்த சில நாட்களாக அதானி வில்மர் பங்குகள் மதிப்பு சரிந்து வருகிறது. மத்திய அரசு சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் எண்ணெய் இறக்குமதிக்கான வேளாண் இறக்குமதி வரியை 2024ம் ஆண்டுவரை நீக்கியது. இதைத் தொடர்ந்து அதானி வில்மர் பங்கு விலை ரூ.631 வரை சரிந்துள்ளது.
ஆனால், சந்தை வல்லுநர்கள் கருத்தப்படி, “ அதானி வில்மர் பங்குகளுக்கு சரிவு தற்காலிகமானதே, விரைவில் மீண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். சமையல் எண்ணெய் வியாபாரம் சூடுபிடித்தவும் பங்கு மதிப்பு உயரும்” எனத் தெரிவித்தனர்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.