நாட்டின் சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய இடத்தைத் தக்கவைக்க கெளதம் அதானி குழுமம் திட்டமிட்டு வரும்நிலையில் கடனில் தத்தளித்து வரும் முக்கிய நிறுவனத்தை வாங்கவும் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய இடத்தைத் தக்கவைக்க கெளதம் அதானி குழுமம் திட்டமிட்டு வரும்நிலையில் கடனில் தத்தளித்து வரும் முக்கிய நிறுவனத்தை வாங்கவும் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் ஸ்விட்சர்லாந்தின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து அம்புஜா சிமெண்ட்மற்றும் ஏசிசி நிறுவனத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கிய நிலையில் இப்போது இந்த நிறுவனத்தையும் விலைக்கு வாங்கபேச்சு நடத்தி வருகிறது
இந்தியா-சீனா நேரடி விமான சேவை தொடங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை
கடனில்தத்தளிக்கும் ஜெயப்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலையைத்தான் அதானி குழுமம்ரூ.5 ஆயிரம் கோடிக்கு வாங்க பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதானி குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் வெளியிட மறுத்தாலும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில் , இந்த வாரத்தில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. எத்தனை கோடிக்கு ஜெயப்பிரகாஷ் சிமெண்ட் தொழிற்சாலையை வாங்கப்போகிறது அதானி குழுமம் என்பதும் தெரியவில்லை.
ஐ.டி. இளைஞர்களே அலர்ட்! 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறது டிசிஎஸ் நிறுவனம்
ஏற்கெனவே அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை வாங்கிய அதானி குழுமத்துக்கு ஜெயப்பிரகாஷ் சிமெண்ட் தொழிற்சாலையையும் கையகப்படுத்தினால், சிமெண்ட் உற்பத்தியில் வலுவான நிறுவனமான அதானி குழுமம் மாறும். அம்புஜா சிமெண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 6.77 கோடி டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறனுடையது.
இதில் ஜெயப்பிரகாஷ் சிமெண்ட் கிரைண்டிங் யூனிட் ஆண்டுக்கு 20 லட்சம் டன் அரைக்கும் திறனுடையது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள நைகிரி எனும் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
பங்குச்சந்தையில் ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கடனிலிருந்து நிறுவனத்தை மீட்க சிமெண்ட் நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைகிரி சிமெண்ட் அரைவை தொழிற்சாலை மட்டுமின்றி, இன்னும் சில சொத்துக்களையும் விற்க ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆலோசித்து வருகிறது.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! சவரன் 38,000க்கு கீழ் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
அடுத்த 5 ஆண்டுகளில் அதானிகுழுமம் தனது சிமெண்ட்உற்பத்தியை 14கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த துறையில் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.