ஹிண்டன்பர்க்-கிற்கு எதிராகச் சட்டப்போராட்டம்! அமெரிக்க சட்டநிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது அதானி குழுமம்

By Pothy Raj  |  First Published Feb 10, 2023, 4:41 PM IST

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த வாக்டெல் சட்டநிறுவனத்தை அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த வாக்டெல் சட்டநிறுவனத்தை அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

Tap to resize

Latest Videos

அதானி நிறுவனத்தில் இமாச்சலப்பிரதேச கலால் வரித்துறை ரெய்டு: அதானி வில்மர் விளக்கம்

இந்த அறிக்கை இந்தியப் பங்குச்சந்தையில் பெரியபிரளயத்தை ஏற்படுத்தியது. அதானி குழுமத்தின் பங்குகள் அடுத்தடுத்த நாட்களில் மோசமாகச் சரிந்தன, கடந்த 10 நாட்களில் மட்டும் அதானி குழுமம் ரூ.10 கோடியை இழந்துள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் கேட்டிருந்த கேள்விகளுக்கும் அதானி குழுமம் பதில் அளித்திருந்தது. தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிய ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதானி குழுமம் தெரிவித்திருந்தது.

அதானி குழுமத்துக்கு பதிலடியாக, ஹிண்டன்பர்க் நிறுவனமும் சட்டரீதியாக எதிர்கொள்வோம், அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்தை இழுப்போம் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்துவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த வாக்டெல் எனும் சட்டநிறுவனத்தை அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருப்பதாக பிரிட்டன் ஆங்கிலநாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு

அந்த நாளேடு வெளியிட்ட செய்தியில் “ ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர, அமெரி்க்காவின் வாக்டெல் மற்றும் லிப்டன் , ரோசன் அன்ட் காட்ஸ் நிறுவனத்தை அமர்த்தியுள்ளது அதானி குழுமம். நியூயார்க் நகரைச் சேர்ந்த வாக்டெல் சட்டநிறுவனம் கார்ப்பரேட் சட்டத்தில் தேர்ந்தநிறுவனம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கடினமான வழக்குகளை எளிதாக நிறுவனம் கையாளும் திறமை படைத்தது” எனத் தெரிவித்துள்ளது.


 

click me!